பிராட்பேண்ட் என்பது அதிவேக நெட்வொர்க் இணைப்புகளை குறிக்கிறது. பழமையான இணைய சேவைகள் “தேவைகேற்ப டயல் ஆன்” முறையில் அணுகப்பட்டன, ஆனால் பிராட்பேண்ட் இணைய சேவையானது “எப்பொழுதும் இணைப்பை” தரும் வசதி பெற்றது. எனவே ஆபத்தும் அதிகம். நமக்கு தெரியாமலே நமது கணினி வேறொருவரால் சமரசம் செய்யப்பட்டு, அதை மற்ற கணினிகளை செயலிழக்கச் செய்ய ஒரு தளமாக பயன்படுத்தப்படலாம்.
பிராட்பேண்ட் இண்டர்நெட் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கணினியை பாதுகாப்பாக பயன்படுத்த பாதுகாப்பு அம்சங்களை கட்டமைப்பது மிகவும் முக்கியம்.

பிராட்பேண்ட் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்:

  1. பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு “எப்பொழுதும் இயக்கத்தில்” இருப்பதால் , அதனை பின்வரும் வழிகளில் தவறாக பயன்படுத்த இயலும்.
  • டிரோஜன்ஸ் மற்றும் திருட்டு வழிகள்
  • சேவை மறுப்பு
  • மற்றொரு தாக்குதலுக்கான வழிவகுத்தல்
  • மறைக்கப்பட்ட ஃபைல் நீட்டிப்புகள்
  • சாட் வாடிக்கையாளர்கள்
  • பாக்கெட் மோப்பம் (Packet sniffing)
  1. இயல்பு நிலை கட்டமைப்புகள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளன

பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பாதுகாப்பாக அணுகுவதற்கான வழிகாட்டுதல்கள்:

  1. எப்பொழுதும் பிராட்பேண்ட் டிரைவர்களை அதன் தயாரிப்பாளர் பரிந்துரைத்த நம்பிக்கையான வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.
  2. டிரைவர் கோட் மென்பொருளை தொடர்ந்து புதுபிக்கவும் அல்லது மேம்படுத்தவும்.
  3. உற்பத்தியாளர் வழங்கிய மின்னழுத்ததிற்கான அடாப்டரை மோடம் (modem) உடன் பயன்படுத்தவும்.
  4. ட்டெர்மினல் அடாப்டரை பயன்படுத்தும்பொழுது, பிராட்பேண்ட் இணைப்புகளில் பில்டர் வசதி செயல்படுகின்றதா என்பதை உறுதி செய்யவும். இது தகவல் பரிமாற்றத்தின் போது தேவையற்ற சத்தத்தை வடிகட்டும்.
  5. இயல்பு நிலை நிர்வாகத்தை மாற்றவும் (பாஸ்வோர்டு மற்றும் பயனர் பெயர்): சாதனங்களுக்கு அங்கிகரிக்கப்பட்ட பயனரை மட்டும் அனுமதிக்க வேண்டுமானால், நிர்வாகத்தின் அல்லது பிராட்பேண்ட் மோடத்தின் இயல்புநிலை பாஸ்வோர்டை மாற்றவும். ஏனெனில் இந்த விவரங்கள் உற்பத்தியாளர் தரும் அனைத்து மோடங்களுக்கும் பொதுவானவை. ஆகையால் இவற்றை எவரேனும் தவறாக பயன்படுத்தக்கூடும்.
  6. சாதனங்களுக்கு நிலையான ஐ.பி முகவரிகளை ஒதுக்கவும்: பெரும்பாலான வீட்டுப் பயனர்களுக்கு மாறும் ஐ.பி முகவரிகள் ஒதுக்கப்படுகின்றது, ஏனென்றால் DHCP தொழில்நுட்பம் அமைப்பதற்கு எளிதானது. இந்த DHCP கூட்டத்தில் உள்ள சரியான முகவரியை பெறுவது சுலபமாவதால், குற்றம் புரிபவருக்கு இது உதவ கூடும். ஆகையால், ரௌட்டரில் உள்ள DHCP தேர்வை விடுத்து நிலையான ஐ.பி முகவரியை பயன்படுத்தவும்.
  1. MAC முகவரி வடிகட்டுதலை அனுமதிக்கவும்; ஒவ்வொரு சாதனத்திற்கும் தனிப்பட்ட MAC முகவரி வழங்கப்படுகிறது. பிராட்பேண்ட் இணைப்பு சாதனம் மற்றும் ரௌட்டர்களோடு இந்த வீட்டு சாதனங்களின் MAC முகவரிகளை ஒரு பயனர் இணைக்கும்பொழுது அந்த சாதனங்களின் இணைப்புகளை மட்டும் அது ஏற்றுக்கொள்ளும்.
  1. வயர்லெஸ் பாதுகாப்பை செயல்படுத்தவும்: மோடம் ரௌட்டர்கள் வயர்லெஸ் பாதுகாப்பை ஆதரிக்கின்றன. பயனர் ஏதேனும் ஒரு நெறிமுறை மற்றும் பாதுகாப்பு பாஸ்வோர்டினை தேர்ந்தெடுக்கவேண்டும். அதே நெறிமுறை மற்றும் பாதுகாப்பு பாஸ்வோர்டினை கணினியிலும் செயல்படுத்த வேண்டும்.
  1. இணக்கமான WPA / WEP குறியாக்கத்தை இயக்கவும்: ஒய் ஃபை அனுமதிக்கப்பட்ட அனைத்து மோடம் அல்லது ரௌட்டர்கள் ஏதோ ஒரு வகையான குறியாக்க தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன. அவற்றை செயல்படுத்தவேண்டும்.
  1. இயல்பு நிலை SSID(Service Set Identifier) ஐ மாற்றவும்: அனைத்து இணைப்பு சாதனங்கள் மற்றும் ரௌட்டர்களும் SSID எனப்படும் நெட்வொர்க் பெயரை பயன்படுத்துகின்றன. தயாரிப்பாளர்கள் பொதுவாக தங்களின் தயாரிப்புகளை ஒரே SSID பெயர் கொண்ட தொகுப்பாக அனுப்புகின்றனர். இதனை தவறாக பயன்படுத்தி, குற்றம் புரிபவர் ஒரு நெட்வொர்க் அல்லது கணினியை தாக்கி உள்நுழைய முடியும். எனவே வயர்லெஸ் பாதுகாப்பை கட்டமைக்கும்பொழுது இயல்பு நிலை  SSID ஐ மாற்றவும்.
  1. தொலைதூர கருவிகளுக்கான பொருத்தமான பாதுகாப்பு தீர்வை (ஆன்டி வைரஸ், ஆன்டி ஸ்பைவேர், டெஸக்டாப் ஃபையர்வால்) பயன்படுத்தி பிராட்பேண்ட் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து கணினி அல்லது லேப் டாப் ஐ பாதுகாக்க வேண்டும்.
  2. மோடம் ரௌட்டர் மற்றும் கணினியில் ஃபையர்வாலை இயக்க வேண்டும் பிராட்பேண்ட் மோடம் ரௌட்டர்களில் ஃபையர்வால் அம்சம் உள்ளமைக்கப்பட்டுள்ளது. அதனை இயங்க செய்யவேண்டும். பிராட்பேண்ட் மோடத்துடன் இணைக்கப்பட்ட கணினியையும் ஃபையர்வால் கொண்டு பாதுகாக்க வேண்டும்.
  1. பயன்படுத்தாத நீண்ட நேரங்களில் மோடம்களை அணைக்க வேண்டும்: நெட்வொர்க்கை அணைத்து வைப்பதால் நிச்சையமாக அது அங்கிகரிக்கப்படாத நபர்களை நம் வலைபின்னல் இணைப்பிற்குள் நுழைவதை தடுக்கும். சாதனங்களை அடிக்கடி இயக்குவது மற்றும் அணைப்பது கொஞ்சம் கடினமாக இருப்பதால், இதனை பயணத்தின் போது அல்லது நீண்ட நேரம் ஆஃப்லைனில் இருக்கும்போது செய்துகொள்ளலாம்.
  1. யூ.எஸ்.பி மோடமாக இருந்தால், பயன்படுத்திய பின் அச்சாதனத்தை துண்டித்து அகற்றவேண்டும்.
  2. பிராட்பேண்ட் இணைய அலைவரிசை பயன்பாட்டு கண்கானிப்பு கருவியை நிறுவவும்.
  3. தொலைதூர நிர்வாகத்திற்கு SSH (பாதுகாப்பான அலைவரிசை) ஐ நிறுவவும்
Page Rating (Votes : 4)
Your rating: