வெப் ப்ரவுஸ்ர், இணையத்தில் உள்ள தகவல் மற்றும் வளங்களை அணுக பயன்படுத்தப்படுகிறது. இது இணையப் பக்கங்களைக் கண்டுபிடித்து காண்பிக்கும் ஒரு மென்பொருளாகும். ஆன்லைனில் உங்கள் தனியுரிமை மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவலை கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டிற்கும் அவை முதல் படியாகும். தனிநபர் கணினி, மடிக்கணினி மட்டுமின்றி மொபைல் போனிலும் தகவல்களை பெற இவை உதவுகிறது. எப்போதும் மேம்படுத்தப்பட்ட ப்ரவுஸ்ர்களையே பயன்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா ஃபைர்ஃபாக்ஸ், கூகிள் குரோம் மற்றும் ஆப்பிள் சஃபாரி போன்ற இணைய ப்ரவுஸ்ர்கள் இன்று அனைத்து கணினிகளிலும் நிறுவப்பட்டுள்ளன. வெப் ப்ரவுஸ்ர்கள் மற்றும் அதன் பாதிப்புகளை பயன்படுத்தி அச்சுறுத்தல்கள் தரும் இணைய குற்றவாளிகள் அதிகரித்து வருவதை நாம் எளிதில் காண முடிகிறது. இவ்வெப் ப்ரவுஸ்கர்களின் தொழில்நுட்ப ஆபத்துகளை முழுதும் அறிந்திராத பெண்கள், இணைய அச்சுறுத்தல்களுக்கு பலியாகின்றனர். எனவே ப்ரவுஸ்ர் பாதுகாப்பு பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளவும்.

உங்கள் வெப் ப்ரவுஸ்ரை ஏன் பாதுகாக்க வேண்டும்?

இணைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதில், ப்ரவுஸ்ர் பாதுகாப்பு முதல் படியாகும். தீங்கிழைக்கும் வலைத்தளங்கள் கொண்டு வரும் அச்சுறுத்தல்கள் அதிகரி்த்து வருகின்றன. இச்சிக்கல் பின்வரும் காரணிகளால் மேலும் மோசமாகிவிட்டது:

  • கணினியை பயன்படுத்தும் பல பெண்கள் வெப் லிங்குகளை க்ளிக் செய்வது பற்றி முழுமையாக அறிந்திருப்பதில்லை.
  •  நிறுவப்பட்ட மென்பொருள் மற்றும் மூன்றாம் தரப்பு மென்பொருள் தொகுப்புகள் இணைந்து பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன
  •  பல வலைதளங்கள், பயன்பாட்டாளரை மேலும் சில அம்சங்களை அல்லது மென்பொருளை நிறுவுமாறு வலியுறுத்துகின்றனர். அவை மேம்படுத்தபடாத மென்பொருளாக இருப்பின், கணினி ஆபத்துக்குள்ளாகின்றது.
  •  பல பயன்பாட்டாளர்களுக்கு வெப் பரவுஸ்ர்களை பாதுகாப்பாக குறியமைக்க தெரிவதில்லை.

வெப் ப்ரவுஸ்ர்களின் ஆபத்துக்கள்     

பொதுவாக ப்ரவுஸ்ர்கள், இணையத்தை சிறப்பாக பயன்படுத்த சில அம்சங்களை இயல்பாக கொண்டுள்ளன. ஆனால் இவைகள் கணினியின் இயக்க அமைப்புகள் மற்றும் அவற்றிலுள்ள தகவல்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. ப்ரவுஸர்கள் மற்றும் அதன் கூடுதல் வசதிகளில் உள்ள பாதிப்புக்குள்ளாகும் தன்மையை இணைய குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் கணினியின் இயக்க அமைப்புகளை கட்டுபடுத்துதல், தனிநபர் தகவல்களை திருடுதல், முக்கிய கோப்புகளை அழித்தல், தகவல் திருடும் மென்பொருளை நிருவுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். சில அம்சங்கள் ப்ரவுஸரின் பயன்பாட்டிற்கு முக்கியமானதாக இருக்கும். பயன்பாட்டாளர் அவைகளின் முக்கியதுவத்தை அறிந்து இயக்கவோ, துண்டிக்கவோ செய்ய வேண்டும்.

ப்ரவுஸர் குக்கீஸ்

குக்கீ என்பது வலைதளங்கள் ப்ரவுஸர்களுக்கு அனுப்பும் ஒரு துண்டு செய்தி. ப்ரவுஸர் இந்த தகவலை சேமித்து, வலைத்தளத்தின் அம்சங்களை அணுகுவதற்கு பயன்படுத்துகிறது. மேலும் மறுமுறை அத்தளங்களை பார்க்க நேரிட்டால் தனித்துவமான அனுகுமுறையை அளிக்கிறது. ஒரு வலைத்தளம் அங்கீகாரத்திற்காக குக்கீகளை பயன்படுத்துகிறார்களானால், குக்கீயை பெறுவதன் மூலம் குற்றவாளிகள் அந்தத் தளத்தில் அத்துமீறி அணுகி தாக்க முடியும்.

தேடல் கோரிக்கைகளை சேமிக்கும் குக்கீ

  • ஷாந்தி ஒரு திரைப்பட வலைத்தளத்தை பார்வையிட்டபொழுது தனக்கு நகைச்சுவைகளில் ஆர்வம் இருப்பதாக சுட்டிக்காட்டினார். இணையதளம் அனுப்பிய குக்கீகள் அவளுடைய விருப்பத்தை நினைவில்கொண்டு, அடுத்த முறை அதே வலைத்தளத்தை பார்வையிட்டபோது, நகைச்சுவைகளை இணையதளத்தில் காட்டியது.

லாக்-இன் தகவலை சேமிக்கும் கூக்கி  

  • பயனர்கள் ஒரு வலைதளத்துக்குள் நுழைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அவை அங்கீகரிக்கபட்டால், ஒரு கூக்கி சேமிக்கப்படுகிறது. இதை கொண்டு அந்த வலைதளம் பயனர் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பதை உறுதிபடுத்திக்கொண்டு அதனில் உள்ள பயன்பாடுகளை உபயோகிக்க அனுமதிக்கிறது.
  • பாப்-அப்ஸ்

பாப்-அப்ஸ் என்பது உங்கள் ப்ரவுஸரில் தானாக தோன்றும் ஒரு சிறிய விளம்பரச் செய்தி. அது ஒரு தரமான நிறுவனத்தின் விளம்பரமாக இருக்கலாம் அல்லது ஆபத்தை உன்டாக்கும் ஒரு மென்பொருளாகவும் இருக்கலாம். பாப்-அப்கள் பாப் அப் விண்டோவில் உள்ள பொத்தான்களைக் கிளிக் செய்ய தவறாக வழிநடத்துகின்றன. ஆனால் சில நேரங்களில் விளம்பரதாரர்கள் உருவாக்கும் பாப் அப் விண்டோக்கள், மூடுவதற்கு அல்லது நிராகரிப்பதற்கு உன்டான விருப்பத்தை ஒத்து இருக்கும். பயனர் அவ்விருப்பத்தை தேர்ந்தெடுக்கும்பொழுது, நாம் எதிர்பார்க்காத செயல்களையும், அங்கீகரிக்கபடாத கட்டளைகளையும் செயல்படுத்துகிறது.

கவர்ச்சிகரமான சலுகைகளுடன் வரும் சில பாப்-அப்களை கிளிக் செய்யும்பொழுது, அறிவிப்பின்றி கட்டணம் வசூலிக்ககூடும்.

  • சீதா இணையத்தில் இசை கேட்கிறாள். இரண்டு மணி நேரத்திற்கு பின் ஒரு பாப்-அப் விளம்பரம் சமீபத்திய பாடல்களை பதிவிறக்கம் செய்ய ஒரு கிளிக்செய்யுமாறு வழியூறுத்துகிறது. அவள் பரவுஸர் பதிவிறக்கப் பகுதியி்ல் உள்ள படிவத்தை பூர்த்தி செய்கிறாள். ஒரு மாததிற்கு பிறகு அவள் கடன் அட்டை ரசீதில் சில கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது தெரியவருகிறது. அவள் மனமுடைந்து, அந்த இசை வலைதளத்திற்கு பல முறை போன் செய்தும் பலன் இல்லை.
  • ஸ்கிரப்ட்டுகள்:

வலைதளங்களோடு தொடர்புபடுத்திகொள்ள ஸ்கிரப்ட்டுகள் உதவுகின்றன. இது பொதுவாக ப்ரவுஸர்களின் ஒரு பகுதியாக பயன்படுத்தபடுகின்றது. இது வாடிக்கையாளரின் ஸ்கிரப்ட்டை பயனரோடு தொடர்புபடுத்திக்கொள்ள, ப்ரவுஸரை கட்டுப்படுத்த, ஒத்தியங்காமல் தொடர்புபடுத்திக்கொள்ள, ஆவணத்தில் மாற்றங்கள் செய்ய உதவுகின்றது. அதே ஸ்கிரிப்ட் தீங்கிழைக்கும் குறியீட்டை உள்நுழைக்கவும் பயன்படுகிறது. இக்குறியீடுகள், ப்ரவுஸரை கட்டுபடுத்தி பிற கோப்புகளை அணுகி பாதிப்புகளை உண்டாக்குகிறது. 

  • ப்ளக்-இன்ஸ்:

ப்ளக்-இன் என்பது இணைய ப்ரவுஸரை பயன்படுத்த உள்ளமைக்கப்பட்ட ஒரு பயன்பாடு. நெட்ஸ்கேப் ப்ரவுஸர், ப்ளக்-இன்னை உருவாக்கவதற்கான NPAPI தரநிலையை உருவாக்கியது. பின்னர் இதே தரநிலையை பிற ப்ரவுஸர்களும் பயன்படுத்தின. ஆக்டிவ்X கட்டுப்பாட்டிற்கான, ப்ளக்-இன்கள் ஒரே மாதரியானவை, ஆனால் இவைகளை ப்ரவுஸர்களின் வெளியே பயன்படுத்த இயலாது. உதாரணமாக, அடோப் ப்ளாஷ் இணைய ப்ரவுஸரில் பயன்படுத்தபடும் ஒரு ப்ளக்-இன் ஆகும்.

தேவையற்ற ப்ளக்-இன்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.

  • உதாரணத்திற்கு, பயனர்கள் வீடியோ பதிவு அல்லது சில இணைய விளையாட்டுகள் கொண்ட வலைதளத்தை பார்ப்பதற்கு அடோப் ப்ளாஷ் ப்ளக்-இன்னை பதிவறக்கம் செய்து நிறுவலாம். ஆனால் அப்பளக்-இன் கீ-லாக்ருடன் சேர்ந்து நிறுவபடலாம். அப்பொழுது, பயனர் பயன்படுத்தும் அனைத்து கீ விபரங்களையும் அது இணைய குற்றவாளிகளுக்கு அனுப்ப நேரிடலாம்.

ப்ரவுஸரில் உள்ள தனியுரிமை அமைப்புகள்

பெரும்பாலும், அனைத்து ப்ரவுஸர்களும் பயனர்களுக்கான தனியுரிமை அமைப்புகளை கொண்டுள்ளன. இவற்றில், தனிநபர் ப்ரவுஸிங், செயல் விவரங்களை கட்டுபடுத்துதல், குக்கீகளை அழித்தல், இன்னும் பிற அடங்கும். எனினும், இத்தனியுரிமை ப்ரவுஸிங் வசதிகள் ஒருவர் ஸபைவேர் மென்பொருள் கொண்டு தூரத்திலிருந்து கண்கானிப்பதை தடுக்க இயலாது.

தனிநபர் ப்ரவுஸிங்

இது பயனர் இணையத்தில் தேடும் பொழுது அவரின் தேடல் வரலாற்றை ப்ரவுஸர் சேகரிக்காத வண்ணம் கட்டுபடுத்துகிறது. இதனால் பயனரின் இணைய செயல்பாடுகளை வேறொருவர் ப்ரவுஸர் வரலாற்றை கொண்டு கண்கானிப்பது தடுக்கப்படுகிறது. ஆனால் இது ஸ்பைவேர் மென்பொருள் கொண்டு ஒருவர் கண்கானிப்பதை தடுக்க இயலாது. கூகுள் கோரமில் இன்காக்னிட்டோ மோடிலும், இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரரில் ப்ரைவேட் எனவும், மோஸிலா ஃபையர்ஃபாக்ஸ் மற்றும் ஸ்ஃபாரியில் ஒரு தனிப்பட்ட வசதியுடனும், தனிநபர் ப்ரவுஸிங் அமைந்துள்ளது

பின்தொடராதே 

இது நீங்கள் பார்க்கும் வலைதளத்தை மூன்றாம் நபர்கள் பின்தொடர்வதை தடுக்கும் ஒரு அமைப்பாகும். இந்த அம்சம் மூன்றாம் தரப்பு கண்காணிப்புக்கு மட்டுமே. இது நடத்தை விளம்பர நோக்கங்களுக்காக பயனர்களை அடிக்கடி கண்காணிக்கிறது. ஆனால் இது நீங்கள் பார்க்கும் வலைதளம் உங்களின் விபரங்களை சேகரிப்பதை தடுக்க இயலாது. அனைத்து ப்ரவுஸர்களும் பின்தொடராத வசதியை கொண்டுள்ளது.

ப்ரவுஸர் வரலாற்றை அழித்தல்

எவரேனும் உங்கள் கணினி பயன்பாட்டை கண்கானித்தால் உங்கள் ப்ரவுஸர் வரலாற்றை அழித்தல் உங்கள் தனியுரிமை அதிகரிக்கும்.

Page Rating (Votes : 3)
Your rating: