தொழில்நுட்பம் மற்றும் இணையம் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்ற நிலையில், பெண்கள் இணைய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். ஒரு பெண், மற்றொரு நபரால் இணையத்தின் மூலமாகவோ,  ஊடாடும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அல்லது மொபைல் ஃபோன்கள் மூலமாகவோ அச்சுறுத்தல், தொல்லை, அவமானம், சங்கடப்படுதல் போன்ற தாக்குதல்களால் குறிவைக்கப்படுவது "சைபர் அச்சுறுத்துதல்" ஆகும். சமூக ஊடகங்களில் உள்ள சுயவிவரங்கள் மக்களுக்கு அவர்கள் விரும்பும் எந்த ஒரு புகைபடத்தையும் அவற்றில் வைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை வழங்குகின்றன. அவர்கள் தங்களின் புகைப்படங்களை பதிவேற்றுதல், விருப்பங்கள் பற்றிய தகவல்கள், இருப்பிடத் தகவல்களை புதுப்பித்தல் போன்ற செயல்களால், இணைய குற்றவாளிகளுக்கு ஒருவர் வாழ்க்கையின் குறிப்பிட்ட அம்சங்களை கேளிக்கையாக்கும் வாய்ப்புள்ளது.

இணைய அச்சுறுத்தலானது மிகவும் ஆபத்தானது ஏனென்றால், அது அச்சுறுத்துபவர் பல்வேறு மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு யாரைவேண்டுமானாலும் எப்பொழுதுவேண்டுமானாலும் பலர் முன்னிலையில் சங்கடபடுத்த முடியும். உடனடி செய்தி தளங்கள், பல்வேறு சமூக ஊடக தளங்கள், ஊடாடும் கேமிங் வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்ற பல வழிகளில் இவற்றை செயல்படுத்த இயலும்.

சைபர் அச்சுறுத்தல் பல்வேறு வழிகளில் நடக்கலாம்

மற்றவர்களுக்கு ஒரு தனிப்பட்ட IM தொடர்புகளை அனுப்புதல்

பெண்கள் மற்றொரு பெணின் பெயரை ஒத்த ஒரு திரை பெயரை உருவாக்கலாம். அப்பெயரில் ஒரு "ஐ" அல்லது "இ"  கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். இப்பெயரைக் கொண்டு அப்பெண்னை பற்றிய தேவையற்ற செய்திகளைப் பிற பயனர்களுக்கு பரப்ப பயன்படுத்துகிறார்கள்.

சைபர் குற்றவாளிகள் மேலே குறிப்பிட்ட தனிநபர்த் தகவலை பரப்புவதற்காக அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

இன்டர்நெட் சேட் ரூமில் உள்ள பயனர்களின் அனுமதியின்றி உங்களுடைய அல்லது பிறரின் தனிப்பட்ட தகவல்தொடர்புகளை பகிரக்கூடாது.

வதந்திகளைப் பரப்புவதற்கு ஆள்மாறாட்டம் செய்தல்

வதந்திகளை பரப்புவதற்காவோ அல்லது வேறொரு பெண்ணைத் துன்புறுத்துவதற்காகவோ வதந்திகளைக் கொண்ட அல்லது ஏமாற்றக்கூடிய ஆஞ்சல்களை அனுப்புதல். ஒரு வெறுப்புக் அரட்டை குழுவில் பாதிக்கப்பட்டவர் இடுவது போன்று ஒரு ஆத்திரமூட்டல் செய்தியை அனுப்பி அவருக்கு எதிராக தாக்குதல்களை வரவழைக்க அவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை அனுப்புதல்.

வெறுப்புத் தகவல்கள் மற்றும் வதந்திகளை மற்றொரு நபராக ஆள்மாறாட்டம் செய்து மின்னஞ்சல் அல்லது மொபைலை பயன்படுத்தி  பரப்ப வேண்டாம்

தர்மசங்கடமான புகைப்படங்கள் அல்லது வீடியோவை வெளியிடுதல்

குளியலறையில் அல்லது ஆடை மாற்றும் அறையில் உள்ள பெண்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்டு ஆன்லைனில் பதிவிடலாம் அல்லது செல்ஃபோனில் மற்றவர்களுக்கு அனுப்பப்படலாம்.

சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தன்னுடைய அல்லது பிறரின் புகைப்படங்களை / வீடியோக்களை பதிவிட வேண்டாம்

வலைத்தளங்கள் அல்லது வலைப்பதிவுகளைப் பயன்படுத்துதல்

பெண்கள் சில நேரங்களில் உருவாக்கும் இணையத்தளங்கள் அல்லது வலைப்பதிவுகள், மற்றொரு பெண்ணை அவமானப்படுத்த அல்லது ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். அவர்கள் உருவாக்கும் பதிவுகள் மற்றொரு பெண்னை அல்லது குழுவை அவமானப்படுத்துவதற்காகவே வடிவமைக்கிறார்கள்.

பிறரை எந்த ஒரு இடத்திலும் அவமானப்படுத்துதல் நல்ல ஒழுங்குமுறை அல்ல. அதை எப்போதும் செய்யாதீர்.

அவமானப்படுத்தும் செய்திகளை செல்போனில் அனுப்புதல்

செய்தி போர் அல்லது செய்தி தாக்குதல் என்பது பல பெண்கள் கும்பலாக பாதிக்கப்பட்டவருக்கு ஆயிரகணக்கில் வெறுப்பு செய்திகளை அவரின் மொபைல் மற்றும் பிறரின் மொபைல்களுக்கு அனுப்புவதாகும்.

செல் போன் மூலம் ஒரு குழந்தை அல்லது பருவமடைந்தவருக்கு இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை அனுப்ப வேண்டாம். இது உங்கள் குடும்பத்திற்கு வீண் செலவு மற்றும் நீங்கள் குற்றம் புரிபவராவீர்.

பிறரை காயப்படுத்த, அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்களை மின்னஞ்சலிலோ அல்லது மொபைல் மூலமாக அனுப்புதல்

குற்றவாளிகள் பெண்களுக்கு வெறுக்கத்தக்க அல்லது அச்சுறுத்தும் செய்திகளை அனுப்பலாம். உண்மையான வாழ்க்கையில் கூறப்படாவிட்டாலும், தவறான அல்லது அச்சுறுத்தும் செய்திகள் பிறரை புண்படுத்தும் மற்றும் மிக தீவிரமான பாதிப்பை உருவாக்கும் என்பதை உணராமல் செய்கின்றனர்.

இணையம் மற்றும் மொபைல் மூலமாக எவரையும் அச்சுறுத்த வேண்டாம். ஏனெனில் பாதிக்கப்பட்டவர் ஓரு குழந்தையாகவோ அல்லது பருவமடைந்தவரகவோ இருப்பின் அது அவர்களை காயப்படுத்தி மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கி, அவர்களின் இறப்பிற்குகூட வழிவகுக்கலாம்.

இணைய அச்சுறுத்தல்களின் பாதிப்புகள்

இணைய அச்சுறுத்தல்கள் எந்த நபருக்கும் பல்வேறு வழிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • உணர்ச்சி துயரம்: கோபம், விரக்தி, சங்கடம், சோகம், பயம், மன அழுத்தம்
  • பள்ளி வேலைகளில் அல்லது வேலை செயல்திறனில் குறுக்கீடுதல்
  • வேலை விட்டுவிடுதல், பள்ளியை விட்டு விலகுதல் அல்லது பள்ளியை மாற்றுதல்
  • அதிகாரம் மற்றும் வன்முறை
  • பொருள் துஷ்பிரயோகம்
  • பள்ளி மைதானத்தில் ஆயுதங்களை வைத்திருத்தல்
  • தற்கொலை

இந்தியாவில், சைபர் அச்சுறுத்தல் தொடர்பாக குறிப்பிட்ட சட்டம் இல்லை, ஆனால் இது போன்ற விஷயங்களை சமாளிக்க  ஐடி சட்டம் 67 போன்ற ஏற்பாடுகள் உள்ளன.

Page Rating (Votes : 0)
Your rating: