இணையத்தின் அதிவேக வளர்ச்சியினாலும், மொபைல் போன்ற சாதனங்களால் விரைவாக பரவும் தகவல்களினாலும் சில பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆகையால் இவ் ஆபத்துகள் குறித்து கவனமாக இருத்தல் அவசியமாகிறது.

ஒரு தனிநபரின் கணினி முறையான பாதுகாப்பின்றி பயன்படுத்தும்பொழுது, அதனை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்த நேரிடும். இவைகள் ஒரு வைரஸ், ட்ரோஜன், கீலாக்கர்ஸ் மற்றும் நிஜ ஹேக்கர்களாக கூட இருக்கலாம். இதனால் தகவல் திருட்டு, தகவல் இழப்பு, தனிநபர் தகவல் வெளியேறுதல், முக்கிய சான்றுகளான கடவுச்சொற்களின் திருட்டு போன்றவை நிகழக்கூடும். ஆகையால், தனிநபரின் கணினி பாதுகாக்கபட்டு இருக்கவேண்டும்.

தனிநபரின் கணினியை பயன்படுத்தும்பொழுது நினைவில் கொள்ளவேண்டியவை

உங்கள் வெப்கேமிராவை இணைப்பிலேயே விட்டுச்செல்லகூடாது. பல ஆப்கள் உங்கள் கேமிராவை ஆன் செய்யவும், நீங்கள் அறியாமலே உங்கள் நடவடிக்கைகளை பதிவு செய்யவும் திறன்பெற்றுள்ளன. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, உங்கள் கேமிராவை பயன்படுத்தாதபோது அதன் இணைப்பை துண்டித்து கேமிராவின் லென்ஸ்ஐ மூடி வைக்கவும். உங்கள் தனிநபர் கணினியை பயன்படுத்திய பிறகு அதனுடன் இணைந்த மானிட்டர், மோடம், ஸ்பீக்கர்கள் போன்றவற்றையும் அணைத்து முறையாக ஷட்டவுன் செய்யவேண்டும்.

வெளிப்புற சாதனங்களை சோதனை செய்த பிறகே பயன்படுத்தவேண்டும்.

வெளிப்புற சாதனங்களான USB போன்றவற்றை தனிநபர் கணினியில் பயன்படுத்துவதற்கு முன்பாக சோதனை செய்யவேண்டும். அந்நியர்களின் வெளிப்புற சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

உங்கள் தகவல்களை  காப்புப்பிரதி (Backup)  எடுக்கவும்:

மின்னல், புயல் போன்ற சமயங்களில் மின்சார கோளாறுகளால் கணினி பாதிப்படையும் போது, உங்கள் தகவல்களை காப்புப்பிரதியிலிருந்து மீட்டெடுக்கலாம். ரேன்ஸம்வேர் போன்ற வைரஸ், கணினியை தாக்கும் சமயங்களில்கூட இவை உதவும். உங்கள் முக்கியமான ஆவணங்களை ஒரு வெளிப்புற சாதனங்களில் மாற்றி ஒரு காப்புப்பிரதி எடுத்து வைத்துகொள்ளவும்.

தனிநபர் கணினியின் அனுமதியை கட்டுபடுத்த வேண்டும்.

உங்கள் கணினியை பொது இடங்களில் நிராகரித்து செல்ல வேண்டாம். ஏனெனில் எவரேனும் அதை அணுகும் வாய்ப்புள்ளது.  கணினியின் தொழில்நுட்ப பாதுகாப்பு போன்றே அதன் வெளிப்புற பாதுகாப்பும் அவசியமானது. 

உரிமம் பெற்ற மென்பொருள் பயன்படுத்தவும்:

எப்போதும் உரிமம் பெற்ற மென்பொருளை நிறுவுவதால் அதன் இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாடுகளின் புதிய பதிப்புகள் முறையாக கிடைக்கப்பெறும். அது ஓபன் சொர்ஸ் மென்பொருளாக இருக்குமாயின் அதனை அவ்வப்போது புதுபித்துக்கொள்ள வேண்டும்.

அச்சிட்டவைகளை நன்றாக படிக்கவும்:

ஒரு மென்பொருளை நிறுவுவதற்கு முன் விற்பனையாளர் / மென்பொருளில் குறிப்பிட்ட  "விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்" / "உரிம ஒப்பந்தம்" ஐப் படிக்கவும்.

எல்லா இயக்க மென்பொருள்களை புதிப்பித்துக்கொள்ள வேண்டும்.

இவை தொந்தரவாக இருந்தாலும், நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. பாதுகாப்பு அம்சங்களை புதுப்பித்தல் புதிய ஆபத்துக்களை தடுக்கும். இவற்றை கட்டாயம் நிறுவவேண்டும்.

இணைய பாதுகாப்பு:

  • இணையத்தில் உள்ள தகவல்களை பயன்படுத்துவதற்கு முன் அதன் பதிப்புரிமை சிக்கல்களை சரிபார்க்கவும். இணையத்தை பயன்படுத்தும்பொழுது அதன் நெறிமுறைகளை பின்பற்றவும்
  • இணைய பரிவர்தனைகள், பதிவிறக்கம் போன்ற பணிகளை செய்யும்பொழுது https (ஹைபர் டெக்ஸ்ட் டிரான்ஸ்பர் ப்ரோடோகால் செக்க்யூர் ) உள்ள பாதுகாப்பான தளங்களையே பயன்படுத்தவும்.
  •  SSL பயன்படுத்தும் தளமாயின், அதன் உரிமையாளர், காலாவதி தேதி போன்ற சான்றிதழ் விவரங்களை சரிபார்த்து அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும். பூட்டு சின்னத்தை கிளிக் செய்வதன் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்
  •  கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு அதன் உண்மையான வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள். மூன்றாம் நபரின் வலைத்தளங்களை உபயோகிக்க வேண்டாம்.
  •  கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் புதுப்பிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மென்பொருளை கொண்டு ஸ்கேன் செய்யவும்
  •  கணினியை பாதுகாக்க ஃபயர்வால் மென்பொருளை நிறுவி முறையாக கட்டமைக்கவும்.

தகவல் பாதுகாப்பு:

  • உங்கள் இயக்க மென்பொருளை தானாக புதிப்பித்துக்கொள்ளும் செயல்பாடுகளை அனுமதிக்க வேண்டும்.
  • வைரஸ் தடுப்பு மென்பொருளை நம்பகமான வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இவை அவ்வப்போது தானாகவே மேம்படுத்தி கொள்கின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்
  •  நம்பகமான இணையத்தளத்திலிருந்து ஆன்ட்டி-ஸ்பைவேர் மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவவும். சமீபத்திய வளர்ச்சிகேற்றவாறு இவை தானாகவே புதுபித்துக்கொள்கின்றனவா என உறுதி செய்ய வேண்டும்
  •  முக்கிய தகவல்களை பாதுகாக்க குறியாக்கத்தை (Encryption) பயன்படுத்துக
  •  கணினியின் அட்மின் கணக்கு மற்றும் இ-மெயில், நிதி செயல்பாடுகள் போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டும்.

காப்புப்பிரதி:

ஹார்ட்டிஸ்க் தோல்வியடையும் போதோ, கணினியை மீண்டும் நிறுவும்பொழுதோ, வடிவமைக்கும்பொழுதோ தகவல்கள் சிதைய வாய்புள்ளது. அகையால், சி.டி / டிவிடி அல்லது யூ.எஸ்.பி போன்றவற்றில் உங்கள் கணினியின் தகவல்களை அவ்வப்போது காப்புப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ரிக்கவரி டிஸ்க்:

  • உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் தந்த ரிக்கவரி டிஸ்க்கை பத்திரமாக வைத்துக்ககொள்ள வேண்டும். கணினி துவக்க தோல்வி அடையும்பொழுது இயக்க மென்பொருளை மீட்டெடுக்க இவை உதவும்.
  •  கணினியின் உகந்த செயல்திறனுக்கு அதன் ஸ்டார்ட்-டப் மென்பொருளை கட்டுக்குள் / கவனத்தில் வைக்க வேண்டும். ப்ரவுஸரை சமீபத்திய வளர்ச்சிகேற்றவாறு புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.
  •  ப்ரவுஸரின் உள்ளே அமைக்கபட்டுள்ள தனிநபர் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்த வேண்டும்.
  •  தகவல் வடிகட்டும் மென்பொருளையும் பயன்படுத்தவேண்டும்.
  •  தேடுதலுக்கான மென்பொருளில், பாதுகாப்பு தேடல் வசதியை ஆன் செய்யவும்.

இ-மெயில் பாதுகாப்பு:

  • இ-மெயில் கணக்கிற்கு வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்தவும்.
  • எப்பொழுதும் இ-மெயில் இணைப்புகளை புதுபிக்கபட்ட ஆண்டி-வைரஸ் மற்றும் ஆண்டி- ஸபய்வேர் கொண்டு ஸ்கேன் செய்யவும்.
  •  ஸ்பாம் கோப்புகளை காலியாக வைத்திருக்க வேண்டும்.

வையர்லெஸ் பாதுகாப்பு:

 

  • இயல்புநிலையில் உள்ள நிர்வாக கடவுச்சொற்களை மாற்றவேண்டும்.
  •  WPA (வைஃபை பாதுகாக்கப்பட்ட அணுகல்) / WEP குறியாக்கத்தை இயக்கவும்.
  •  இயல்புநிலை SSID ஐ மாற்றவும்.
  •  MAC முகவரி வடிகட்டுதலை இயக்கவும்.
  •  பயன்படுத்தாதபோது உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்கை அணைக்கவும்.

மோடம் பாதுகாப்பு:

  • இயல்புநிலை கடவுச்சொற்களை மாற்றவும்.
  •  பயன்படுத்தாதபோது அணைக்கவும்.
Page Rating (Votes : 3)
Your rating: