பல பெண்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு புதியவர்களே. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குபின் இந்தியாவில் ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெவ்வேறு வழிகளை பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. டிஜிட்டல் கட்டணம் என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும். இதில் பணம் செலுத்துபவர் மற்றும் பெறுபவர் இருவரும்  டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் பெறவும் செய்கின்றனர். இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள், பெண்களின் கைகளில் அவர்களின் கடமைகளை சிறப்பாக செய்வதற்கான ஆற்றல்களை தந்துள்ளது. ஆனால் இது தானாக நடைபெறாது. டிஜிட்டல் நிதி சேவைகள் பல வழிகளில் வழங்கப்பட்டாலும் உதாரணமாக ஏ.டி.எம் கள், விற்பனை செய்யும் இடங்கள், அட்டைகள் (கடன் அல்லது பற்று), பெண்களின் நம்பிக்கையை பெற்றது மொபைல் போன்களே. 

பாதுகாப்பு பிரச்சனைகள்

பல்வேறு விதமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி பார்ப்போம். பெண்கள் தங்கள் கிரெடிட்/டெபிட் அட்டைகளை சாத்தியமான எல்லா இடங்களிலும் பயன்படுத்துகின்றனர். ஆனால் பலருக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும்போது எதை சரிபார்க்க வேண்டும், எந்த தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதில்லை. தொழில்நுட்பங்களை சரியாக அறிந்திராத பெண்களின் பெரும் பகுதியினர் தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இதனை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தக்கூடும்.

ஆன்லைன் வங்கி சேவை:

 • பயனர்களின் முக்கிய தகவல்களைப் பெற சைபர் குற்றவாளிகள் அதிகமாக பெண்களையே குறிவைக்கிறார்கள். இத் தகவல்களைப் பெற ஒரு போலியான போன் கால் (விஷிங்) செய்து, வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்கவேண்டும் என்று கூறும்போது நீங்கள் அதிகம் யோசிக்காமல் உங்கள் தகவல்களை தரக்கூடும். மேலும் சில மோசடி கால்கள் வாடிக்கையாளரின் கணக்கில் அதிக வரவு வைத்து அதனை ஒரு மூன்றாம் தரப்பு கணக்கிற்கு திரும்ப மாற்ற வேண்டும் எனக்கூறும் பிற வகைகளும் உண்டு.
 • ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் பெண் தொழில்முனைவோரிடம், சைபர் குற்றவாளிகள் இ-மெயில் அனுப்பி, அவர்களின் பொருட்களை அனுப்பும் சப்ளையர் வங்கி கணக்கை மாற்றிவிட்டதாகவும் இனிவரும் கட்டணங்களை புதிய கணக்கிற்கு அனுப்புமாறும் கூறுவர். உண்மையில் அக்கணக்கு குற்றம் புரிபவருடையதாக இருக்கும். இது போன்ற போலி இ-மெயில்கள் ஒரு மேலாளர் அல்லது இயக்குனர் அல்லது மூத்த ஊழியரிடமிருந்து வந்தது போன்று அமைந்திருக்கும். இந்த இ-மெயில்கள் பெறுநரை ஒரு வெளிநாட்டு கணக்கிற்கு பணப் பரிமாற்றத்தை செய்யுமாறு வேண்டுகின்றது. ஒரு மேலாளரின் இ-மெயில் கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது போன்று தோன்றினாலும் உண்மையில் பணம், குற்றம் புரிபவரின் கணக்கிற்கு சென்றடைகிறது.
 • அவர்கள் பாஸ்வோர்டுகளை திருடும் தீங்கிழைக்கும் மென்பொருள் குறியீடுகளை அனுப்பி முக்கிய தகவல்களை பெற முயற்சிக்கின்றனர்.
 • பெரும்பாலான பெண்கள் ஒரே இரகசிய தகவல்களை பல கணக்குகளுக்கு வைத்திருப்பதால், இத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் பெறும்போது அவர்கள் உங்கள் அனைத்து கணக்குகளையும் அனுகுவது சுலபமாகிறது.

மொபைல் வங்கி சேவை:

 • டிஜிட்டல் அறிவு இல்லாதவர்கள், சைபர் குற்றவாளிகள் இ-மெயில் மூலம் அனுப்பும் வங்கி செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடும். அவர்கள் அனுப்பும் இ-மெயில்களில் உள்ள வங்கி சின்னங்கள் சிறிய எழுத்து மாற்றத்துடன் இருப்பதால் உண்மையான வங்கி வலைதளங்கள் போன்றே காணப்படுகின்றன. இவர்கள் அந்த லிங்குகளை க்ளிக் செய்து அச்செயலிகளை நிறுவுகின்றனர். இச்செயலிகள் மூலம் வங்கி பரிமாற்றங்களை செய்யும்போது உங்கள் தகவல்கள் தவறானவர்களிடம் சென்றடைகிறது.
 • பிராண்டட் தயாரிப்புகளுக்கு நல்ல சலுகைகளை தரும் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்ய பெண்களுக்கு ஆன்லைன் நண்பர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த செயலிகள் தீங்கானவை. இது நிறுவப்பட்டதும், அவர்ளுக்கு வரும் ஒருமுறை எஸ். எம்.எஸ் அங்கீகார பாஸ்வோர்டை அவர்கள் அனுமதியின்றி திருடுகிறது.
 • குறுஞ்செய்தி மோசடி (SMiShing) என்பது அடையாள திருட்டு அல்லது பணத்திற்காக ஒருவரின் தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பு தகவல்களை திருட மோசடிகாரர்கள் பயன்படுத்தும் ஒரு பொதுவான உக்தியாகும். ஏமாற்றுகாரர்கள், பெண்களுக்கு நம்பகமான எண்களிலிருந்து வந்தது போன்று குறுஞ்செய்தி  அனுப்பி உங்களை ஏமாற்றி உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவர்.

மின் பணப்பைகள் (இ- வாலெட்):

 • பலவகையான இ-வாலெட்டுகள் இருப்பதால் ஒரு புதிய பயனருக்கு நம்பகமான ஒன்றை தேர்ந்தெடுப்பது கடினமாகிறது. இறுதியில் போலியான ஒன்றை தேர்த்தெடுக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த இ-வாலெட்டுகள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் திரைப்பட டிக்கட்டுகளை வாங்கும்போது தள்ளுபடிகள் தருவதால் இதை பதிவிறக்கம் செய்யுமாறு நண்பர்கள் அறிவுறுத்தக்கூடும்.
 • பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் பிற சேவைகளான வாடகை கார் முன்பதிவு, உணவுப் பொருட்கள், போக்குவரத்து/ ஹோட்டல் முன்பதிவு போன்றவற்றோடு இ-வாலெட் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால் மூன்றாம் நபரின் ஆபத்துகளுக்கு உள்ளாகின்றனர். அவர்களின் தனிநபர் தகவல்கள் மற்றும் வங்கி தகவல்கள் இச் சேவை இணைப்புகளால் ஆபத்துகுள்ளாகின்றது.

ஆதார் அடிப்படையிலான கட்டணம்

 • ஆதார் அடிப்படையிலான கட்டணங்களில், பரிவர்த்தனைக்கான அங்கீகாரத்தை சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்தால் உங்களின் ப்யோமெட்ரிக் அடையாளங்கள் ஆபத்துகுள்ளாகும்.

பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்தும்போது ஆபத்துகளை தவிர்ப்பது எப்படி?

 • யூகிப்பதற்கு கடினமாக இருக்கும் மேல் எழுத்துக்கள், கீழ் எழுத்துக்கள், எண்கள் மற்றும் சின்னங்களை கொண்ட பாஸ்வோர்டுகளை பயன்படுத்த வேண்டும்.
 • எல்லா ஆன்லைன் கணக்குகளுக்கும் ஒரே பயனர்பெயர் மற்றும் பாஸ்வோர்டுகளை பயன்படுத்த வேண்டாம்.
 • குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பாஸ்வோர்டுகளை அடிக்கடி மாற்றவும்
 • உங்களின் பாஸ்வோர்டுகள் அல்லது பயனர் அடையாள தகவல்களை பிறரிடம் பகிர வேண்டாம்.
 • உங்களின் பரிவர்த்தனைகள் முடிந்தபின் வங்கி, கடன் அட்டை மற்றும் வணிக தளங்களிலிருந்து வெளியேற வேண்டும்.
 • வணிக அல்லது வங்கி வலைதளங்களில் உங்களின் பயனர் பெயர் மற்றும் பாஸ்வோர்டுகளை கணினி சேமித்துவைக்க அனுமதிக்காதீர்கள்.
 • ஆன்லைன் தளங்களி்ல் பாதுகாப்பு கேள்விகளை அமைக்கும் போது, ​​உங்கள் தனிப்பட்ட தகவலுடன் தொடர்பில்லாத தவறான தகவல்களைப் பயன்படுத்தவும், மேலும் உங்கள் பதில்களை ஞாபகம் வைத்திருங்கள்.
 • “https://.” உடன் தொடங்கும் வலைத்தளத்தில்தான் பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகள் நிகழ்த்த வேண்டும். வலை முகவரியின் தொடக்கத்தில் “http” க்குப் பிறகு “எஸ்” இல்லாமல் இருப்பின் அந்த விற்பனையாளரை நம்ப வேண்டாம்.
 • உங்களின் ஒவ்வொரு இணைய கொள்முதல் மற்றும் பரிவர்த்தனை பற்றிய பதிவுகளை வைத்திருங்கள். அவற்றை மாதந்தோம் வரும் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி அறிக்கைகளுடன் ஒப்பிடுங்கள். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் உடனடியாக அட்டை வழங்குபவரிடம் தெரிவிக்கவும்.
 • உங்கள் கிரெடிட் கார்டுகள் வழங்கும் மோசடி பாதுகாப்பு மற்றும் பொறுப்பு பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ளுங்கள். மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள காப்பீடு வரம்புகள் என்ன என்பதை அறிக.
 • மேம்படுத்தப்பட்ட ஆன்டிவைரஸ் மற்றும் ஃபையர்வால் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதால் புதிய மோசடிகள் மற்றம் ஹேக்கிங் தந்திரங்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
 • உங்கள் கணினியில் வைரஸ் ஸ்கேன்களை தவறாமல் இயக்கவும்.
 • விளம்பரங்களை தடை செய்யும் மென்பொருள் மற்றும் ஸ்பைவேரை கணிக்கும் மென்பொருள்களை பயன்படுத்தவேண்டும். இவை மேம்படுத்தபட்டதாகவும் சோதிக்கபட்டதாகவும் இருக்கவேண்டும்.
 • “எளிய கட்டணம்” அல்லது “ஒரு க்ளிக் ஆர்டர்” போன்ற கட்டண முறைகளை பயன்படுத்தக்கூடாது. பயனர் பெயர் மற்றும் பாஸ்வோர்டுகளை வலைதளங்களில் இடுவதற்கு கூடுதல் விநாடிகள் ஆகும், ஆனால் இணைய கடன் அட்டை மோசடிகளிலிருந்து மீள்வதற்கு மாதங்கள் ஆகும்.
 • உங்கள் இணைய பிரவுஸரின் மிகுந்த புதிப்பிக்கப்பட்ட பதிப்பை பயன்படுத்தவும். இவர்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலைதளங்களில் அனுப்பபடும் உங்கள் தகவல்களை கட்டுபடுத்தவும் பாதுகாக்கவும் செய்வர்.  

Source:

Page Rating (Votes : 3)
Your rating: