தற்போது உடனடி செய்தியிடல், நம்மில் பலரின் விருப்பமான தகவல் தொடர்பு கருவியாக உருவாகியுள்ளது. வேகமாகவும், எளிதாகவும் தொடர்புகொள்ளும் வசதியை பெற்றுள்ளதால் இது வணிகம் மற்றும் தனிப்பட்ட தகவல்தொடர்புக்கு ஒரு சிறந்த ஊடகமாக விளங்குகிறது. துரதிருஷ்டவசமாக, மற்ற பிற ஆன்லைன் தகவல்தொடர்பு போன்றே உடனடி செய்தியிடலிலும் அச்சுறுத்தல்கள் உள்ளன. இந்த செயலிகள் பயனர்களிடையே மிகவும் பிரபலமானதற்கு முக்கிய காரணம் இவை மிகவும் எளிதாகவும், இலவசமாகவும் உள்ளது. வாட்ஸ்-ஆப் (WhatsApp), ஸ்நாப்-சாட் (Snapchat), வைபர் (Viber), வீசாட் (Wechat), மற்றும் இன்னும் பல உடனடி செய்தியிடல் செயலிகள் உள்ளன.

மொபைல் உடனடி செய்தியிடலில் உள்ள ஆபத்துகள்

இன்றைய காலகட்டத்தில் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர். இது சமகால உலகில் நிலவுகின்ற நிலைமை என்றாலும், பெண்கள் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்வில் வலி மற்றும் நஷ்டத்தை தாங்கி வருகின்றனர். இணையத்தின் வளர்ந்து வரும் வேகமும், பல்வேறு சாதனங்களின் மூலம் விரைவாகப் பரவும் தகவல்களும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் மட்டுமின்றி ஆபத்துகளையும் வழங்கியுள்ளன. பெண்களுக்கு எதிரான சைபர் அச்சுறுத்தல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளை ஆராய நம்மை உட்படுத்த வேண்டும்.

உடனடி செய்தியிடலை பயன்படுத்தும் போது ஏற்படும் சில அபாயங்களையும் அதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் பற்றி காண்போம்.

  • முக்கிய தகவல்களின் கசிவு:

பெரும்பாலான உடனடி செய்தியிடல் செயலிகள் ஓருவரின் தனிப்பட்ட தகவல்களை சுலபமாக வெளிபடுத்துவதால் அவற்றை மோசடி நோக்கங்களுக்காக பயன்படுத்தகூடும். இவற்றில் பெரும்பாலும் ஒரு நபரின் சுயவிவரப் படத்துடன் தொடர்புடையவை. உங்கள் தொலைபேசி எண்ணைக் கொண்ட எவரும் இதை காணலாம் மற்றும் அணுகலாம். எனவே இது பெண்களின் தனியுரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, இவற்றை பயன்படுத்தும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். சைபர் உலகில் பெண்களின் பாதுகாப்பு முதன்மையானதாகும்.

பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்த்து, அனைவரும் பார்க்கக்கூடிய உங்களின் சுயவிவரப் படத்தை நீக்குவது எப்போதும் நல்லது.

தகவல் வெளிப்படுத்துதல் - ஒரு ஆய்வு

சில உடனடி செய்தியிடல்கள் அனைத்து பரிமாற்றங்களையும் லாக் - ஃபைல்(log-files) இல் சேமிக்க அனுமதிக்கின்றன. இந்த லாக்குகள் முக்கிய தகவல்களையும் கொண்டிருக்கலாம். ஒரு ஹேக்கர் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதிவுகளைத் திருடியதாக ஒரு வழக்கு அறிக்கை வெளியானது. ஹேக்கர் அந்த லாக்குகளை வெப்சைட்டின் பல இடங்களில் பதிவிட்டதால் மிக மோசமான கார்ப்பரேட் பாதிப்பை உருவாக்கியது. அப் பதிவுகளில் வியாபார கூட்டாளிகள், ஊழியர்கள் மற்றும் இணை வலைத்தளங்கள் பற்றிய முக்கியமான நிறுவன தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இப் பதிவுகளை இணையத்தில் ஏற்றிய பிறகு, நிறுவனத்தின் மூத்த ஊழியர்களில் பலர் பதவி விலகினர்.

உடனடி செய்தியிடல் பக்கங்களை ஓரு ஹேக்கர் கண்காணிக்க முடியுமானால் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது. இந்த வழக்கில் பதிவு-கோப்புகள் திருடப்பட்டதாக இருப்பினும், தகவல் தொகுப்புகளை அணுகக்கூடிய எந்த ஒரு செயலும் இதே பாதிப்பை ஏற்படுத்த இயலும்.

  • கண்காணிப்பு / பின்தொடர்தல்:

தங்களின் இருப்பிடம் பற்றிய நேரலை தகவல்களைப் பகிர்ந்துகொள்வது, பெண்களுக்கு நேரிடும் ஒரு தீவிர அச்சுறுத்தலாகும். உங்களின் எண்ணை அறிந்த எந்தவொரு குற்றவாளியும், உங்களின் இருப்பிட சேவைகளை கண்டு உங்களின் வழக்கமான பயணத்தை அடையாளம் காணவும், அதன்படி சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.

தெரிந்த நபர்களுடன் மட்டுமே இருப்பிட சேவைகளைப் பயன்படுத்தவும், அந்நியர்களுடன் பகிர வேண்டாம்

  • ஹேக்கிங்:

ஸ்மார்ட் போன்களுக்கான பல உடனடி செய்தியிடல் செயலிகள் தனிப்பட்ட தகவல்கள்களை எவ்வாறு பரிமாற்றுகின்றன, சேமிக்கபடுகின்றன என்பதைப் பற்றி ஓரு ஆய்வு செய்யப்பட்டது. உடனடி செய்தியிடல் சந்தையில் முன்னனியில் உள்ள ஒருவர் முகவரி புத்தகங்களையும், தனிநபர் தகவல்களையும் குறியாக்கம் செய்யாமலேயே சர்வருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஐ.டி(ID) உள்ளிட்ட பல தனியார் தகவல்கள், மூன்றாம் நபர்கள் பார்க்க மற்றும் பயன்படுத்துவதற்கு உடனடியாக கிடைக்கின்றன.

மற்றவர்களின் உடனடி செய்தியிடல் உரையாடல்களை அணுகவும், தனிப்பட்ட தகவல்களை திருடவும் சில பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நீங்கள் பயன்படுத்தும் ஆப்-கள், உங்களின் தகவல்களை சர்வருக்கு குறியாக்கப்பட்ட வடிவத்தில் அனுப்புகின்றதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.

  • ஆள்மாறாட்டம்:

ஹேக்கர்களுக்கு ஏதுவாக மிகவும் முக்கியமான தகவல்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹேக்கர் கடவுச்சொற்களை, கணினி அமைப்பு தகவல் மற்றும் முக்கிய கோப்புகளை உடனடி செய்தியிடல் மூலம் பெறலாம். ஹேக்கர்கள் பல வழிகளில் மற்ற பயனர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்ய முடியும். சந்தேகப்படாத பயனர்களின் கணக்கு தகவல்களை திருடுவது மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தாக்குதல் ஆகும்.

IM சாட்டுகள் மூலம் இரகசியத் தகவல்களை பரிமாறுவதை தவிர்க்கவும்.

  • துன்புறுத்தல்/ஸ்பேமிங் (Spamming):

இது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக தொடர்பு கொள்ளுதல், தொந்தரவு செய்தல், அச்சுறுத்தல் மற்றும் / அல்லது பயமுறுத்துவதாகும். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, தொடர்ந்து நடைபெறுகின்ற ஒரு செயல். உதாரணமாக, தொடர்ச்சியான மொபைல் அழைப்புகள் /செய்திகள்; யாரும் ஒரு செய்தியை அனுப்ப முடியாதபடி குரலஞ்சலை (voicemail) செய்திகளால் நிரப்புதல்.

  • தீங்கிழைக்கும் குறியீடுகளை பரவலாக்க எளிய வழி

ஒரு IM வோர்ம் என்பது IM நெட்வொர்க்குகளில் பரவக்கூடிய சுயபெருக்கம் தன்மை கொண்ட ஒரு மால்வேர் ஆகும். ஒரு IM வோர்ம் ஒரு பி.சியை தொற்றும்போது, ​​அது IM முகவருக்கான முகவரி புத்தகத்தை கண்டுபிடிக்கிறது. இது நண்பர்கள் பட்டியல் (buddy list ) அல்லது பொது தொடர்பு பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பாதிக்கப்பட்ட நபரின் அனைத்து தொடர்புகளுக்கும் தன்னை அனுப்ப முயற்சிக்கிறது. சில IM வோர்ம்-கள், சமூக பொறியியல் உக்திகளைப் பயன்படுத்தி, தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்ட ஒரு செய்தியை ஏற்றுக்கொள்வதற்காக பெறுநரை ஏமாற்ற பயன்படுத்துகின்றன. ஸ்பேம்-ஐ அனுப்புவதற்காக உடனடி செய்தியிடல் மென்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. மின்னஞ்சல்களுக்குப் பதிலாக IM மூலம் ஸ்பேம் அனுப்புவது 'ஸ்பிம்' என்று கூறப்படுகிறது.

லிங்க்குகளை கிளிக் செய்வதற்கு முன் சந்தேகியுங்கள்; உங்கள் நண்பரிடம் அவர் அதை அனுப்பினாரா என்று கேளுங்கள்.

  • நெட்வொர்க் சிக்கல்கள்

உடனடி செய்தியிடல் பயன்பாட்டில், சேவை மறுப்பு தாக்குதல்கள் அதிகமாக உள்ளன. இந்த தாக்குதல்கள் உடனடி செய்தியிடல் பயன்பாட்டினை செயலிழக்க செய்யும். நெட்வொர்க்கை அதிக அளவில் பயன்படுத்தி அதன் வளங்களை பயன்படுத்துவது, கட்டமைப்புகளை அழிப்பது மற்றும் நெட்வொர்க் கூறுகளை மாற்றுவது போன்ற செயல்களால் முறையான பயனர்கள் நெட்வொர்க்கை பயன்படுத்துவது தடைபடுகிறது. குற்றம் புரிபவர் செய்திகளை இடைமறிக்க முடியும், சாதனங்களை அமைத்து ஒருவருக்கொருவர் சட்டவிரோதமாக தொடர்புகொள்ளமுடியும் மற்றும் உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஒழுங்காக செயல்பட தேவையான மற்ற வளங்களை உபயோகிக்க முடியும்.

பெரும்பாலும் பெண்களே முக்கிய இலக்காகின்றனர். பொதுவான ஒரு தாக்குதல் என்னவெனில் ஒரு குறிப்பிட்ட பயனரை மிக அதிக எண்ணிக்கையிலான செய்திகளைக் கொண்டு தாக்குவதாகும். இத்தாக்குதல்களை நிறைவேற்ற ஒரு ஹேக்கருக்கு பல கருவிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர் என்ன நடந்தது என்பதை உணரும் நேரத்தில், சாதனம் செயல்படாமல் போகலாம். ஆகையால், உடனடி செய்தியிடல் பயன்பாட்டின் நிராகரிப்பு பட்டியலில் தாக்குபவரின் பயனர் கணக்குகளை சேர்ப்பது கடினமாகிவிடுகிறது.

ஒரு நெட்வொர்க்கினை பயன்படுத்தும் போது, நிறுவனங்கள், உள் கட்டமைக்கப்பட்ட உடனடி செய்தி இணையத்தை பயன்படுத்தும் உடனடி செய்தி போக்குவரத்தையும் பிரிக்கும் வகையில் நெட்வொர்க்குகளை புதுபிக்க வேண்டும்.

  • IM மென்பொருள் குறைபாடுகள்

பிற மென்பொருளைப் போலவே, பிரபலமான உடனடி செய்தியிடலிலும் பொதுவான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததற்கான வரலாறு உண்டு. ஒரு IM பயன்பாட்டினை நிறுவும் போது ஸ்மார்ட்ஃபோன் / டெஸ்க்டாப்பில் புதிய பாதிப்புகளை அறிமுகப்படுத்தலாம்.

ஆண்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்தி நிரந்தரமான வைரஸ் பாதுகாப்பை செயல்படுத்த வேண்டும்

உடனடி செய்தியிடல், ஹேக்கர்களுக்கு பாதுகாப்பு மீறல் தாக்குதல்களுக்கு நிறைய வாய்ப்புகளை தருகிறது. ஏனெனில் அதிகமான மக்கள் ஃபைல்களை பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இந்த பயன்பாட்டை உபயோகிக்கின்றனர். ஹேக்கர்கள் எளிதில் உங்கள் பி.சி. அல்லது மொபைல் சாதனத்திற்கு தொலைவிலிருந்து நுழைவதற்கான அனுமதியை பெறும் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

உடனடி செய்தியினைப் பயன்படுத்தும் போது பல நன்மைகள் இருந்தாலும், இதில் பாதுகாப்பு சிக்கல்களும் உள்ளன. இந்த பயன்பாட்டின் நன்மைகளை அனுபவிக்கும் அதே சமயம் எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.

Source: Instant Messaging

Page Rating (Votes : 4)
Your rating: