நாம் "நெறிமுறைகள்" என்று கூறும்போது, அது ஒரு நபரோ அல்லது ஒரு குழுவினரின் அணுகுமுறை, மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிப்பிடுகிறோம். நெறிமுறைகள் என்பது அறநெறி பற்றிய ஆய்வு ஆகும். இணைய நெறிமுறை சிக்கல்கள் அனைத்தும் தனிப்பட்ட, சமூக மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை சமாளிக்கின்றன. எளிமையாக கூறினால், கணினி நெறிமுறைகள் என்பது கணினிகளின் பயன்பாடுகளை நிர்வகிக்கும் ஒழுக்க தத்துவங்களின் தொகுப்பாகும். ஒரு கணினியைப் பயன்படுத்தும் ஒரு தனிநபரை அல்லது குழுவை நிர்வகிப்பதற்கான நடத்தை ஒழுங்குமுறைக் கொள்கைகள் ஆகும். கணினி ஒரு சிறந்த தொழில்நுட்பம் என்பது நாம் அனைவரும் அறிந்திருப்பதே. ஆனால், நெறிமுறை சிக்கல்களான தனிநபர் ஊடுருவல், ஏமாற்றுதல், தனியுடைமை, சைபர்-கொடுமைப்படுத்துதல், சைபர்-பின்தொடர்தல்,அவதூறு,ஏய்ப்பு, அல்லது சமூக பொறுப்பு மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகளான பதிப்புரிமை பிரச்சனைகளை எழுப்புகிறது.
அனைவருக்கும்மான இணைய நெறிமுறைகள்
ஏற்றுக்கொள்ளுதல்
இணையம் ஒரு நெறிமுறையற்ற மண்டலம் அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய வலை தளம், நெறிமுறைகள் பரவலாக கருதப்படும் ஒரு இடம். ஆகையால் அதில் தரப்படும் தகவல்களையும், சேவைகளையும் வடிவமைக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். இணையம் உலகளாவிய சமுதாயத்திற்கு அப்பாற்பட்டதில்லை, அதில் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதை நாம் உணர வேண்டும்.
தேசிய மற்றும் உள்ளூர் கலாச்சாரங்களுக்கான உணர்வுத்திறன்
இது அனைவருக்கும் பொதுவானது. தேசிய மற்றும் உள்ளூர் கலாசாரத் தடை இதற்கு இல்லை. உள்ளூர் தொலைக்காட்சி அல்லது உள்ளூர் செய்திதாள் போன்று இது ஒரு குறிப்பிட்ட கலாசாரத்திற்கு உட்பட்டதல்ல. இது பலதரப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்கு இடமளிக்க வேண்டும்.
இ-மெயில் மற்றும் சாட்டிங் பயன்பாட்டின் போது
குடும்பம் மற்றும் நண்பர்களுடனான தொடர்புகளுக்கு இணையத்தை பயன்படுத்த வேண்டும். அந்நியர்களிடம் சாட்டிங் செய்வது மற்றும் அவர்களிடமிருந்து வரும் இ-மெயில்களை பிறருக்கு அனுப்புவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இச்செயல்களினால் ஏற்படும் ஆபத்துகளை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.
வேறொருவர் போன்று நடிப்பது
நாம் வேறொருவர் போன்று நடித்து பிறரை ஏமாற்றுவதற்கு இணையத்தை பயன்படுத்தக்கூடாது. இணைய உலகில் மற்றவர்களை ஏமாற்ற நம் சொந்த அடையாளத்தை மறைப்பது குற்றம் மட்டுமின்றி, இது மற்றவர்களுக்கு ஆபத்தையும் விளைவிக்க கூடும்.
தவறான மொழியைத் தவிர்க்கவும்
இ-மெயில், சாட்டிங், ப்ளாகிங் மற்றும் சமூக வலைதளங்களில் முரட்டுத்தனமான அல்லது மோசமான மொழியை நாம் பயன்படுத்தக்கூடாது;
நாம் அவர்களின் கருத்துக்களை மதிக்க வேண்டும். இணையத்தில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.
தனிநபர் தகவலை மறைக்க வேண்டும்
வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள், ஆர்வங்கள், கடவுச்சொற்கள் போன்ற தனிநபர் விவரங்களை நாம் கொடுக்கக்கூடாது.
எந்தவொரு புகைப்படமும் அந்நியர்களுக்கு அனுப்பக்கூடாது, ஏனெனில் நாம் அறியாமலே அது தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
பதிவிறக்கும்போது
இண்டர்நெட் வீடியோக்கள் பார்க்க, விளையாட, இணையத்தில் தேட அல்லது தகவல் பதிவிறக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆகையால் நாம் பதிப்புரிமைகளின் முக்கியத்துவம் மற்றும் அதிலுள்ள பிரச்சனைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
இணையத்தை அணுகுதல்
இண்டர்நெட், நேரத்தை திறமையாக செலவிட உதவும் ஒரு கருவியாகும். மேலும் இது பாடத்திட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. கற்றல் என்பது, தொடர்புடைய மற்றும் நம்பகமான தகவலை விரைவாகவும், எளிமையாகவும் கண்டறிந்து, அந்தத் தகவலைத் தேர்ந்தெடுத்து, புரிந்து கொண்டு, மதிப்பீடு செய்யும் திறமையாகும். இண்டர்நெட்டில் தகவலைகளைத் தேடுவது இந்த திறன்களை வளர்க்க உதவும். மாணவர்களுக்கு, இணைய கட்டுரைகளை ஒப்பிடச் செய்யும் வகுப்பறை பயிற்சிகள் மற்றும் வீட்டுப்பாடங்களை கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் வெவ்வேறு பார்வையாளர்களுக்கான எழுதும் தேவை, குறிப்பிட்ட கட்டுரையின் நோக்கம், அதன் துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கண்டறியும் திறனை பெறுவார்கள். பல தளங்கள் பிரச்சினைகள் குறித்த குறிப்பிட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றன. இதனால் இணையத்தை பயன்படுத்துவோர் ஓரு கருத்தின் உண்மை நிலை மற்றும் உணர்வை வேறுபடுத்தி பார்க்கும் திறனை பெறுவதோடு, உள்ளுணர்வு மற்றும் புறஉணர்வுகளை ஆராயும் திறனையும் பெறுகிறார்கள்.
இணைய பயனர்களுக்கான நெறிமுறை விதிகள்
கணினியைப் பயன்படுத்தும் போது தனிநபர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- பிற பயனர்களுக்கு தீங்கு விளைவிக்க இணையத்தை பயன்படுத்த வேண்டாம்.
- பிற தகவல்களை திருட இணையத்தை பயன்படுத்த வேண்டாம்.
- உரிமையாளரின் அனுமதி இல்லாமல் ஃபைல்களை அணுக வேண்டாம்.
- பதிப்புரிமை பெற்ற மென்பொருளை ஆசிரியரின் அனுமதி இல்லாமல் நகலெடுக்க வேண்டாம்.
- எப்போதும் பதிப்புரிமை சட்டங்களையும் கொள்கைகளையும் மதிக்க வேண்டும்.
- நீங்கள் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்பது போலவே மற்றவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும்.
- மற்ற பயனரின் கணினி ஆதாரங்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம்.
- சட்டவிரோத தொடர்பு மற்றும் நடவடிக்கைகளை கண்டுபிடித்தால், அவற்றைப் பற்றி இணைய சேவை வழங்குபவர்கள் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
- பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொற்களைப் பாதுகாப்பது பயனர்களின் பொறுப்பாகும்.
- நினைவில் கொள்வதற்காக அவற்றை காகிதத்தில் அல்லது வேறு எங்கும் எழுதக்கூடாது.
- பயனர்கள் மற்றவர்களின் தகவலை மீட்டெடுக்கவோ அல்லது மாற்றவோ வேண்டுமென்றே இணையத்தை பயன்படுத்தக்கூடாது. இதில் கடவுச்சொற்கள் பற்றிய தகவல், ஃபைல்கள் முதலியன அடங்கும்.