• நீங்கள் வழக்கமான இல்லாத போது இணையதள வணிக முறையினை பயன்படுத்துபவராக இல்லாத போது இணையதள வணிக முறையினை தவிர்க்க வேண்டும்.
  • இத்தகைய போலி மின்னஞ்சல்கள் உண்மையான நிறுவனங்களிலிருந்து அனுப்பப்பட்டது போல போலி வலைதளங்கள் மூலம் அனுப்புவது மட்டும் அல்லாமல் போலியான நேர்காணலையும் நடத்துகிறார்கள்.
  • இதனைத்தொடர்ந்து ஒரு போலி வேலை வாய்ப்பு கடிதமும் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் ஏமாற்றுகாரர்கள் வேலை வாய்ப்பு கடிதத்தினை வழங்குவதற்காக ஒரு பெரும் தொகையினை கடிதம் வழங்குவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ கேட்பர்.
  • பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்பதுபோல தொலைபேசியின் வாயிலாக அழைத்து, வேலை தேடுபவர்களிடமிருந்து வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு வங்கி கணக்குகளில் பணத்தினை செலுத்தச் செய்து உடனடியாக அவற்றினை எடுத்துக் கொண்டு ஏமாற்றுகின்றனர்.

முன்னெச்சரிக்கை:

  • நீங்கள் பெறும் எந்த ஒரு ஸ்பேம் (SPAM) மின்னஞ்சலும் உண்மையான நிறுவனங்களிலிருந்து அனுப்பப்பட்டதா என்று மின்னஞ்சல் தலைப்பை சரிபார்க்காமல் பதிலளிக்க வேண்டாம்.
  • விண்ணப்பித்த நிறுவனம் நேரடியாக உங்களை நேர்காணல் செய்யாதவரை யாரிமுடம் பணத்தினை செலுத்த வேண்டாம்.
  • பணம் கொடுத்து குறுக்குவழியில் வேலை பெற முயற்சிக்க வேண்டாம், போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை அளித்து பணத்தைப் பெற்ற பின் ஏமாற்றப்படக் கூடும்.
  • உங்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உண்மையானதா என்று அசல் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் சரி பார்க்க வேண்டும்.
Page Rating (Votes : 3)
Your rating: