இணையம் சார்ந்த குற்றங்கள் மிகுந்த வண்ணம் உள்ளன. அவற்றில் பெண்களே முக்கிய இலக்குகளாக உள்ளனர். ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட்கள், பெயர் முகம் அறியாத எந்த ஒரு பெண்னையும் எளிதில் தாக்கும் வகையில் உள்ளன. பெண்கள் நாள் ஒன்றிற்கு நான்கு மணி நேரத்தி்ற்குமேல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதோடு, ஆண்களைவிட எளிதில் அதற்கு அடிமையாகிறார்கள் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பெண்கள் ஸ்மார்ட்போன்களில் பேசுவது, விளையாடுவது, தேடுவதைக்காட்டிலும் அதிகமாக சமூக வலைதளங்கள் மற்றும் ஆண்லைன் ஷாப்பிங்கிற்க்கு பயன்படுத்துகிறார்கள். இச்சாதனங்கள் அதற்குரிய பண்புகள் மட்டுமின்றி அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களின் பாதுகாப்பும் கவலைக்குள்ளாகின்றன. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல வகையான அச்சுறுத்தல்களாள் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில், பெண்கள் இணைய அச்சுறுத்தல்கள் குறித்தும் அதன் ஆபத்துகள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது.

கைப்பேசியின் பாதுகப்பு அச்சுறுத்தல்களின் பிரிவுகள்:

1.கைப்பேசி கருவி மற்றும் தகவல் பாதுகப்பு அச்சுறுத்தல்கள்

இதில் அங்கிகரிகப்படாத தாக்குதல்கள், குறிவைத்து தாக்குவது மற்றும் தொலைந்துபோன, திருடிய கைப்பேசியில் வரும் தாக்குதல்கள் அடங்கும்.

  •   தொலைந்துபோன அல்லது திருடிய கருவிகள்

இன்றைய நாட்களில் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாகிவிட்டது. நாம் நம் கைப்பேசியினை தொலைக்கும் பட்சத்தில் அதில் உள்ள முக்கிய தகவல்கள் இணைய குற்றவாளிகளை சென்றடையும் ஆபத்துகள் உள்ளன. கைப்பேசியில் உள்ள ஆப்களை கொண்டே, அதை பயன்படுத்துவோரின் வயது, பாலினம், இருப்பிடம், செயல் விருப்பங்கள், மருத்துவ தேவைகள் மற்றும் குழந்தை பிறப்பை எதிர்நோக்குகின்றவர் போன்றவற்றை எவரேனும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

உங்கள் கைப்பேசியினை திறப்பதற்கு கடவுச்சொற்கள் அல்லது பயோமெட்ரிக் அங்கிகாரத்தை பயன்படுத்தவும்

உங்கள் சிம் கார்டை சிம் லாக் வசதி கொண்டு பத்திரபடுத்தவும். ஏனெனில் உங்கள் கைபேசி தொலைந்து போனால் எவரேனும் எளிதில் உங்கள் சிம் கார்டை அணுகும் வாய்ப்பு உள்ளது.

  •   முக்கிய தகவல்கள் வெளிப்படுதல்

இதில் கைபேசியில் உள்ள தகவல்களின் பாதுகாப்பின்மை அல்லது தகவல்கள் வெளியாவதை தடுக்க இயலாமை போன்றவைகள் அடங்கும். இவை தனிநபர் அடையாளங்களுக்கு மிகபெரும் அச்சுறுத்தல்களை விளைவிக்கும். உங்களின் தனிப்பட்ட வங்கி குறித்த தகவல்களும் ஆபத்துக்குள்ளாகின்றன.

உங்கள் கைபேசியில் கடன் அட்டை மற்றும் வங்கி அட்டையின் கடவுச்சொற்கள் போன்ற மிக முக்கிய தகவல்களை சேமிக்காமல் இருப்பது நல்லது.

ஆப்களை பயன்படுத்திய பிறகு அவற்றிலிருந்து வெளியேறியதை உறிதிபடுத்திக்கொள்ளவும்

2.மொபைல் இணைப்பில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்

ப்ளுடுத், ஒய்-பை, யூ.எஸ்.பி போன்ற தொழில்நுட்பங்களால் நம் மொபைல் போனை நாம் அறிந்திறாத பிற அமைப்புகள், மொபைல்கள் மற்றும் நெட்வொர்க்குகளோடு இணைக்கும் போது ஏற்படும் அச்சுறுத்தல்கள்.

திறந்தவெளி ஒய்-பை

பெரும்பாலான திறந்தவெளி ஒய்-பை நெட்வொர்க்குகளோடு நம் மொபைல் போனை இணைக்கும்பொழுது பல அச்சுறுத்தல்கள் உள்ளன. இச்சமயங்களில் எந்தவித வங்கி பரிவர்தனைகளையோ மற்றும் முக்கிய தகவல்களை பயன்படுத்துவதையோ தவிர்த்தல் நல்லது.

உங்கள் மொபைல் போன் அல்லது லேப்-டாப்பை பிறர் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கும்பொழுது மட்டுமே ப்ளூ-டுத்தை ஆன் செய்யவும். மற்ற நேரங்களில் யாரும் அறிந்திராத வகையில் பயன்படுத்தவும். பிறர் உங்கள் போன் அல்லது லேப்-டாப்பை ப்ளூ-டுத் மூலம் அணுக முயற்சித்தால் அதன் வரம்பு பகுதியிலிருந்து துண்டிக்கப்படும் தூரம் நகர்ந்து செல்லவும்.

திறந்தவெளி ஒய்-பையுடன் இணைந்திருக்கும்பொழுது எவ்வித நிதி, மருத்துவம், வணிகம் சம்பந்தமான பணிகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்ய நேர்ந்தால் VPN வசதியை பெற்றுக்கொள்ளவும் அல்லது பாதுகாப்பான நெட்வொர்க்கை பயன்படுத்தவும்.

திறந்தவெளி ஒய்-பையுடன் இணைந்திருக்கும்பொழுது கடவுச்சொற்கள் மற்றும் முக்கிய தகவல்களை பயன்படுத்த வேண்டாம்.

மின்னஞு்சல்களில் ஃபிஷ்ங் செய்வது

நம்பிக்கையான வங்கிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போன்று அனுபப்படும் மின்னஞ்சல்களை கண்டு பலர் ஏமாறுகின்றனர். அவர்கள் கையாளுகின்ற மொழி பெறுநரிடம் ஒரு அவசர உணர்வை ஏற்படுத்தி தவறான முடிவெடுக்க தூண்டுகிறது. அத்தருணங்களில் ஆபத்து விளைவிக்கும் லிங்க்குகளை க்ளிக் செய்வது, தகவல்களை நம்பகதன்மையற்ற தளங்களில் பகிர்வது, தகவல்களை திருடும் மால்வேர் கொண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்வது, ஆபத்துக்குள்ளான இ-மெயிலை பிறரிடம் பகிர்வது போன்ற தவறுகளை செய்ய நேரிடும்.

இ-மெயிலில் உள்ள முகவரி அனுப்புநரின் பெயருடன் ஒத்துபோகிறதா என்று சரி பார்க்கவும். அனுப்புநரின் வலைதளங்களுக்கு URL முகவரி கொண்டு உள்ளே நுழையவும். அனைத்து பதிவிறக்கங்களையும் வைரஸ் தடுப்பு மென்பொருள் கொண்டு சோதனை செய்யவும்.

குற்ஞு்செய்திகள் அனுப்புவது

இ-மெயில் ஃபிஷ்ங் போன்றே குறுஞு்செய்திகளிலும் அச்சுறுத்தல்கள் உள்ளன. அனுப்பநரின் முகவரியிலோ அல்லது நோக்கத்திலோ சந்தேகம் இருக்குமாயின், அனுப்புநர் என்று கருதுபவரிடம் போன் செய்து உறுதிபடுத்திக்கொள்ளவும். வங்கிகளை தொடர்ப்கொள்ள நினைத்தால் நம்பிக்கையான வழியை பயன்படுத்தவேண்டும். குற்ஞு்செய்திகளில் வரும் எந்தவொரு URL முகவரியையும் க்ளிக் செய்யவேண்டாம். 

பலவீனமான அங்கீகாரம்

மொபைலில் உள்ள நம்பகத்தன்மையற்ற பணம் செலுத்தும் முறையை குற்றம்புரிபவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆன்லைன் வணிகம் செய்ய உதவும் ஆப்கள் மற்றும் வர்ச்சுவல் வாலட்கள் போன்ற பணம் செலுத்தும் முறைகள் பலதரப்பட்ட அங்கீகாரம் பெற்றும் பலநிலை கொண்ட குறியமைப்போடும் (data encryption ) விளங்கவேண்டும். உதாரணமாக ஒரு பாதுகாப்பான அமைப்பானது பயன்பாட்டாளரின் ID, கடவுச்சொற்கள், உருவ ஒற்றுமைகள், ஒரு முறை பயன்பாட்டிற்க்கான PIN அனுப்புவது போன்றவற்றை கேட்டு உறுதிபடுத்திக்கொள்கின்றது. சிறந்த பணம் செலுத்தும் முறைகள் உங்களது கடன் அட்டையை டோக்கனாக மாற்றி அதனை வேறெங்கும் பார்க்க இயலாத வகையில் அமைந்திருக்கின்றன.

3.மொபைல் செயல்பாடுகள் மற்றும் அவற்றை இயக்கும் மென்பொருகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்

மொபைல் பயன்பாடுகளிலும் அதன் இயக்க மென்பொருளிலும் எளிதில் பாதிக்கப்படகூடிய தன்மை உள்ளது. இதனால் பல அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும்.

இலவச செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்யும்பொழுது, நமது தனியுரிமை சுகந்திரத்தை எந்தளவுக்கு சமரசம் செய்துகொள்கிறோம் என்பதை கவனிக்க தவறுகிறோம். மால்வார் போன்ற பல செயல்பாடுகள் மொபைலில் பதிவிறக்கம் செய்த பின் நம் தகவல்களை திருடுகின்றன.

அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்களில் இருந்து மொபைல் ஃபோன் அல்லது லேப்டாப்பில் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்.
செயலிகளின் பயன்பாட்டினை நன்கு சிந்தித்தபின் அனுமதிக்கவும். ஒரு ப்ளாஷ் லைட் செயலி உண்மையிலேயே உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள வேண்டுமா?

செயலிகளைப் பயன்படுத்தாதபோது, முக்கியமான அனுமதிகளை திரும்பப் பெறவேண்டும்.

மொபைல் போன்களின் தாக்குதலினால் ஏற்படும் விளைவுகள்:

  1. மொபைல் போனில் சேமித்துவைக்கப்படும் தனிநபர் தகவல்கள் வெளியாகின்றன.
  2.  பிரீமியம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த எஸ்எம்எஸ் மற்றும் கால்சேவைகளை நாம் அறியாமலே பயன்படுத்தும் மென்பொருள்களால் பண இழப்பு ஏற்படக்கூடும்.
  3.  மொபைல் போனின் இருப்பிடம், அதிலுள்ள குறுஞு்செய்திகள், கால்சேவைகள் போன்றவற்றை நாம் அறியாமலே கண்காணிக்கப் படக்கூடும்.
  4.  மொபைல் ஃபோன் மீதுள்ள கட்டுப்பாட்டை இழப்பதோடு நம்மை அறியாமலே இலக்கு தாக்குதலுக்கு ஆளாகிறோம்.
Page Rating (Votes : 9)
Your rating: