ஆன்லைன் மோசடிகள் உங்களை ஏமாற்றி பணம் சம்பாரிக்கும் ஒரு முயற்சியாகும். ஆன்லைன் மோசடிகளில் பல வகைகள் உண்டு; இவற்றில் போலி பெயர்கள், போலி புகைப்படங்கள், போலி இ-மெயில்கள், போலி ஆவணங்கள், போலி வேலை வாய்ப்புகள் மற்றும் இன்னும் பலவழிகளில் பணத்தை பெறுவது அடங்கும்.

பொதுவாக, போலி இ-மெயில்கள் அனுப்பி உங்களின் ஆன்லைன் வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை அறிந்து கொள்ள இது நிகழ்கிறது. சில சமயங்களில் நீங்கள் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்கும்பொழுது, சில லாட்டரி நிறுவனங்கள் உங்களுக்கு இ-மெயில்கள் மூலம் போலியான நோட்டீஸ் மற்றும் பரிசு பொருட்களை அனுப்புவார்கள். சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி அப்பாவி மற்றும் ஏமாறக்கூடியவர்களை தந்திரமாக ஏமாற்றுகிறார்கள்.

மோசடி செய்பவர்கள் பெண்களை எவ்வாறு குறிவைக்கிறார்கள்

  • டேட்டிங் மற்றும் காதல் மோசடி

இது பெரும்பாலும் ஆன்லைன் டேட்டிங் வலைத்தளங்கள் மூலம் நடைபெறுகிறது, ஆனால் அவர்கள் சமூக ஊடகங்கள் அல்லது இ-மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி மூலமும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிமுகமானதாக தெரியவருகிறது. இம்மாதிரியான மோசடிகளை ‘கேட் ஃபிஷிங்’ என்றும் அழைப்பர். மோசடிகாரர்கள் பொதுவாக போலியான ஆன்லைன் சுயவிவரங்களை வடிவமைத்து உங்களை கவருகின்றனர். அவர்கள் ஒரு கற்பனையான பெயரைப் பயன்படுத்தலாம் அல்லது இராணுவ அலுவலர்கள், உதவித் தொழிலாளர்கள் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்ற உண்மையான, நம்பகமான மக்களின் அடையாளங்களை தவறாக பயன்படுத்தலாம். அவர்கள் உங்களிடம் அதிகமான உணர்ச்சிகளை குறுகிய காலத்தில் வெளிப்படுத்துவார்கள். உங்கள் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் பெற, அவர்கள் அன்பான வார்த்தைகளை பொழிவது, 'தனிப்பட்ட தகவல்கள்களை' பகிர்ந்துகொள்வது, உங்களுக்கு பரிசுகளை அனுப்புவது போன்ற வழிகளில் பெருமளவு முயற்சி செய்வார்கள்.

உங்கள் நம்பிக்கையை வென்ற பிறகு, உங்களின் பாதுகாப்புகள் குறைந்த சமயத்தில் உங்களிடம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பணம், பரிசு அல்லது உங்கள் வங்கி / கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டு பெறுவார்கள். அவர்கள், உங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பெரும்பாலும் நெருக்கமானவற்றை அனுப்ப சொல்லி கேட்கலாம்.

  • லாட்டரி மோசடி

சில நேரங்களில் “நீங்கள் ஒரு லாட்டரி வென்று இருக்கிறீர்கள்” போன்ற இ-மெயில்/ எஸ்.எம்.எஸ் உங்களுக்கு வரக்கூடும். இது போன்ற இ-மெயில்/ எஸ்.எம்.எஸ் பெறுவது பெரிய விஷயம் மட்டுமின்றி மகிழ்ச்சியான விஷயமாகும். இது போன்ற இ-மெயில்/ எஸ்.எம்.எஸ்களுக்கு பதிலளிப்பதால் பெரிய அளவில் பணத்தை இழக்க நேரிடும். ஏனென்றால் இவைகள் உண்மையானவை அல்ல. உங்களை ஏமாற்றி பணத்தை பறிக்க மோசடிகாரர்கள் முயற்சி செய்கிறார்கள்.

  • உங்கள் தகவல்களை திருடும் போலி வினாடி வினாக்கள்

திரைப்படங்கள் அல்லது வீடியோ கேம்கள் சார்ந்த பதிவுகள் மற்றும் வினாடி வினாக்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். பொதுவாக, இக்கேள்விளுக்கான உங்களது பதில்களை வைத்து, உங்களை திரைப்பட கதாபாத்திரங்களோடு ஒப்பிடுவது அல்லது உங்களின் தனித்துவத்தை மதிப்பீடு செய்வர். பெரும்பாலும், இதுபோன்ற வினாக்களுக்கான உங்களின் பதில்களை வைத்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி மூன்றாம் நபர்களுக்கு விற்கின்றனர். பெரும்பான்மையான இவ் வினாடி வினாக்கள் ஃபேஸ் புக்கில் நுழைந்து பதிலளிக்குமாறு வலியுறுத்துகின்றன. இதன் மூலம் அவர்கள் உங்களின் இ-மெயில், இருப்பிடம், மொழி, வேலை மற்றும் பல தகவல்களை அவர்கள் எளிதில் பெற இயலும்.

  • வாழ்த்துக்கள், வெப்கேம், டிஜிட்டல் கேமரா, அல்லது நம்பமுடியாத அளவிலான ரொக்கப் பரிசை வென்றுள்ளீர்கள் போன்ற இ-மெயில் மோசடி

நீங்கள் டிஜிட்டல் கேமரா வெப்கேம் போன்ற சிறப்பு பரிசை வென்றுள்ளீர்கள், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கீழே தரப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து எங்கள் வலைப்பக்கத்திற்கு சென்று உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விபரங்களை வழங்கி அப்பரிசை அனுப்புவதற்கான கட்டணத்தை செலுத்தவும் போன்ற செய்திகளை கொண்ட இ-மெயில்களை நீங்கள் பெறக்கூடும். இருப்பினும் அந்த பொருட்கள் ஒருபோதும் வருவதில்லை. ஆனால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.

  • வரி மோசடி

அரசாங்க நிறுவனத்திலிருந்து வந்ததாக கூறி உங்களிடம் வரி பாக்கி இருப்பதாகவும், உங்களை கைது செய்யதல், நாடு கடத்ததல் அல்லது பணி நீக்கம் செய்யதல், ஓட்டுனர் உரிமம் / பாஸ்போர்ட்டை ரத்து செய்யதல் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க உடனடியாக பணத்தை கட்டுமாறு வலியுறுத்துவர். பணம் செலுத்துவதற்கு பணப் பரிமாற்றம் அல்லது பணம் ஏற்றப்பட்ட பற்று அட்டையை வாங்குமாறு பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தப்படுகிறார். அரசு நிறுவனங்கள் முன்கூட்டியே ரசீது அனுப்பாமல் வரியை உடனே கட்டுமாறு எப்போதும் சொல்வதில்லை. பொதுவாக, இந்த வலைதளங்கள் அரசு வருமான வரி வலைதளங்களை போன்று தோற்றமளிக்கும். இவர்கள் வருமான வரி பாக்கியை ஆன்லைன் மூலம் திரும்பி அனுப்புவதாக கூறி வரிசெலுத்துபவரிடம் அவர்களின் கடன் அட்டை சி.வி.வி, ஏடிம் பின், மற்றும் பிற தனிநபர் தகவல்களை பெறுகின்றனர்.

  • உங்கள் கணக்கை கண்காணிக்கும் செயலற்ற போலி நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள்

நீங்கள் உண்மையில் சந்தித்திராத மற்றும் அவர்கள் யார் என்று தெரியாத நபர்கள் சமூக ஊடகங்களில் உங்களுக்கு நண்பர்களாக இருக்கலாம். குற்றவாளிகள் உங்களின் இந்த கவனக்குறைவை பயன்படுத்தி உங்களுக்கு நண்பர்களாகி தகவலைச் சேகரித்து, உங்கள் செய்கைகளைக் கண்காணிக்க முடியும். குறிப்பாக, உங்களின் சுற்றலா புகைப்படங்களை கொண்டு நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு சென்றுள்ளதை தெரிந்துகொண்டு காலியாக உள்ள உங்கள் வீட்டில் நுழைய ஏற்ற தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

  • பண மோசடிகள்

இவ்வகை மோசடிகள் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் காணப்படுகின்றன. இதில் ஆரம்பத்தில் ஒரு சிறு தொகையை முதலீடு செய்தால் பயனருக்கு பெரும் லாபம் ஈட்டி தருவதாக கூறி ஏமாற்றுகின்றனர். மோசடி செய்பவர் தன்னை நிதி ஆலோசகராகவும் அல்லது இன்டர்நெட் மார்கெட்டர் எனவும், முதலீட்டில் பத்து மடங்கு லாபம் பெற தேவையான நாணய மாற்று விகிதங்கள் மற்றும் பங்கு விலைகளை கையாள்வதில் தான் ஒரு வித்தகர் என்று காண்பித்து கொள்வார். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு குறைந்தபட்ச தொகையை முதலீடு செய்வதே.

  • வேலைவாய்ப்பு மோசடி

பொதுவாக, சமூக ஊடகத்தை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கான வேலை வாய்புகளை அதிகரிக்கவே பெரும்பாலும் இதில் உள்ளனர், எனவே வேலை வாய்ப்பைப் பெறுவது வழக்கமான ஒன்றுதான். எனினும், சில மோசடிகாரர்கள் வெறுமனே ஒரு சில வாரங்களுக்கு உங்களை பணியில் அமர்த்தி, உங்களின் முதல் சம்பள தேதியின் சில நாட்களுக்கு முன் உங்களை நீக்கிவிடுவர். வழக்கமாக, இந்த போலி வேலை வாய்புகள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் எனவும் கணிசமான சம்பளம் தருவதாகவும் கூறுவர். இன்னும் சிலவற்றில் இவை ப்ராஜகட் அடிப்படையிலான வேலைகளாக இருக்கலாம், எனவே நீங்கள் முதலில் வேலை செய்ய வேண்டும், பின்னர் பணம் வழங்கப்படும். நீங்கள் நினைத்ததை போல பணம் தரப்படுவதில்லை.

  • நன்கொடை மோசடி

ஒரு பேரிடர் அசம்பாவிதத்தில் (அதாவது வெள்ளம், புயல், பூகம்பம்) பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய நன்கொடை வழங்குமாறு இ-மெயில், கடிதம் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்பர். சட்டபூர்வமான தொண்டு நிறுவணங்கள் ஒரு நபருக்கு நன்கொடை வழங்க பண பரிமாற்ற சேவையை கேட்பதில்லை.

  • வாடகை சொத்து மோசடி

பாதிக்கப்பட்டவர் ஒரு சொத்தின் வாடகைக்கென பணத்தை அனுப்புகிறார்கள் ஆனால் அச்சொத்தினை பயன்படுத்த முடிவதில்லை. அல்லது பாதிக்கப்பட்டவர் சொத்தின் உரிமையாளராக இருக்கலாம் அதாவது, அவருக்கு வாடகைதாரர் ஒரு பெருந்தொகைக்கான காசோலையை அனுப்பிவிட்டு அதிலிருந்து ஒரு சிறு தொகையை ஆன்லைன் மூலம் திருப்பி அனுப்புமாறு கேட்பர். ஆனால் வாடகைதாரர் அனுப்பும் காசோலை பெரும்பாலும் செல்லாததாக இருக்கலாம்.

 

ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வழிகள்

  • மோசடிகள் என்று ஒன்று இருப்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் விருப்பத்திற்க மாறாக, ஒரு தனி நபர் அல்லது நிறுவனங்களிடம் இருந்து வரும் அழைப்புகள், அது தொலைபேசி, அஞ்சல், இ-மெயில் அல்லது சமுகவலை தளங்கள் மூலம் வரும்பொழுது, அது ஒரு மோசடியாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அது உண்மையாக இருக்கும் என நீங்கள் நம்பினால் ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம் என்று நினைவில் கொள்ளுங்கள்,

  • நீங்கள் கையாளும் நபரை அறிந்திருங்கள்

நீங்கள் ஒருவரை ஆன்லைனில் மட்டும் சந்திருந்தால் அல்லது ஒரு வணிகரின் நம்பகத்தன்மையை சந்தேகித்திருந்தால், சிறிது நேரம் ஒதுக்கி அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புகைப்படங்களில் கூகுள் இமேஜ் மூலம் தேடலாம் அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் மற்றவர்களைப் பற்றி இணையத்தில் தேடலாம்.

  • இ-மெயில், வங்கியில் இருந்து பெறப்பட்டதா என்பதை உறுதி செய்யவும்

வங்கி விவரங்களை ஆன்லைனில் வழங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். முன்பு நீங்கள் பெற்ற இ-மெயிலைப் பற்றி வங்கியுடன் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். ஏதாவது முக்கியம் அல்லது அவசரமாக இருந்தால், இ-மெயில் அனுப்புவதற்கு பதிலாக வங்கி ஏன் என்னை அழைக்கவில்லை? என்று யோசியுங்கள்.

  • சந்தேகத்திற்கிடமான செய்திகள், பாப்-அப் விண்டோக்களைத் திறக்காதீர்கள் அல்லது இ-மெயில்களில் வரும் இணைப்புகள் மீது கிளிக் செய்ய வேண்டாம் - அவற்றை நீக்கிவிடவும்

ஒரு தொடர்பின் அடையாளத்தில் சந்தேகம் இருப்பின், ஒரு ஃபோன் புத்தகம் அல்லது ஆன்லைன் தேடல் போன்ற தனிப்பட்ட ஆதாரத்தைக் கொண்டு உறுதிபடுத்தவும். உங்களுக்கு அனுப்பிய செய்தியில் உள்ள தொடர்பு விவரங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

  • சமூக மீடியாவில் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சரிபார்த்துக் கொள்ளவும்

நீங்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் யார் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறியவும். சந்தேகத்திற்கிடமான நடத்தையை நீங்கள் அறிந்திருந்தால் அல்லது ஸ்பேமில் கிளிக் செய்திருந்தால் அல்லது ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டிருந்தால், உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும் மற்றும் மோசடி பற்றி புகாரளிக்க முயற்சி செய்ய வேண்டும்.

  • இ-மெயில் மூலம் நீங்கள் பெற்ற தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் தயாரிப்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். எந்தவொரு ஆன்லைன் ஷாப்பிங் அல்லது போட்டியில் நுழையாதபோது, ​​அத்தயாரிப்புகளுக்கான இ-மெயிலை நீங்கள் பெற்றது ஏன் என்று யோசியுங்கள்.

  • லாட்டரி / வேலை வாய்ப்பு ஊழலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

மோசடிகாரர்கள் மற்றும் இ-மெயில்களில் வரும் ‘நீங்கள் வென்றுள்ளீர்கள்’ என்ற வார்த்தையை கண்டு ஏமாறாதீர்கள், உங்கள் பங்கேற்பு இல்லாமலே இ-மெயிலை ஏன் பெற்றீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்

  • ஆன்லைனில் வாங்கும்போது கவனமாக இருங்கள்

உண்மை போன்று தோன்றும் சலுகைகளை கண்டு எச்சரிக்கையாக இருங்கள். எப்பொழுதும் நீங்கள் அறிந்த, நம்பிக்கையான ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

Page Rating (Votes : 7)
Your rating: