ஃபிஷிங் என்பது இ-மெயில் மூலம், ஒரு நம்பகமான நிறுவனம் போன்று ஏமாற்றி நமது பயனர் பெயர்கள், பாஸ்வோர்டுகள், PIN, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற  தகவல்களை பெற முயற்சிக்கும் ஒரு வழி

ஃபிஷிங் என்பது பொதுவாக இ-மெயில் அல்லது உடனடி செய்தி அனுப்பும் செயல்பாடுகள் வழியாக நடத்தப்படுகிறது.  மேலும் நிஜமான வளைதளங்களின் தோற்றம் மற்றும் உணர்வுகளை  ஒத்திருக்கும் போலியான வலைதளங்களில், பயனர்களின்  விவரங்களை பதியுமாறு வலியுறுத்துகின்றனர்.  ஃபிஷிங், பயனர்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் சமூக பொறியியல் நுட்பங்களின் ஒரு உதாரணம் ஆகும்.

ஃபிஷிங் இ-மெயில் செய்தி எப்படி இருக்கும்? விளக்கமாக....

ஃபிஷர்ஸ் பெண்களை எப்படி குறிவைக்கிறார்கள்?

ஃபிஷிங் தாக்குதல்களால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது, மற்றும் ஒரு நபரின் பாதுகாப்பிற்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. பெண்களுக்கு இது நடைபெறக் கூடிய சில வழிகளை இங்கே தருகிறோம். ஃபிஷர்ஸ் பெண்களின் பலவீனங்களை, உதாரணமாக ஒப்பனை, எடை குறைப்பு திட்டங்கள், பெற்றோர் பராமரிப்பு பயன்பாடுகள், வங்கி கணக்கு மூடுப்படும் போன்று அச்சுறுத்தும் இ-மெயில் முதலியவற்றை பயன்படுத்துகிறார்கள்,.

அழகு சாதனங்களில் அதிரடி சலுகைகள்:

ஃபிஷர்ஸ் பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்களில் உள்ள ஷாப்பிங் போக்குகளை ஆராய்கிறார்கள். அந்த தகவல்களைக் கொண்டு  ஃபிஷிங் இ-மெயில்கள் அனுப்பி அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.  அவர்கள் நிஜமான வலைத்தளங்களை ஒத்ததாக இருக்கும் இ-மெயில்களில் கிராபிக்ஸ் பயன்படுத்தி ஒரு 

நம்பகமான முறையில் அழகு பொருட்களில் சலுகைகளை வழங்குகிறார்கள். ஆனால் உண்மையில் அது போலியான ஸ்கேம் தளங்களுக்கு அல்லது நிஜமானது போன்று காணப்படும் பாப் அப் ஜன்னல்களுக்குள் உங்களை இட்டு செல்கிறது.

பெரும்பாலான பெண்கள் அழகுபொருட்களின் மேல் உள்ள பேராசையினால், ஃபிஷர்களின் தந்திரங்களுக்கு இரையாகின்றனர்.  அவர்கள் இந்த சலுகைகளைப் பெறுவதற்கு இணைப்பைக் கிளிக் செய்து பொருட்களை வாங்குகின்றனர்.  அவர்கள் தங்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்வதால் மேலும் பல சிக்கல்களுக்கு இது வழிவகுக்கும்.

  • பெற்றோர் பராமரிப்பு / கல்விப் பயன்பாடுகளை இலவசமாக நிறுவுதல்:

தாய்மார்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்தவற்றையே தேடுகிறார்கள். ஃபிஷர்ஸ் கைகுழந்தைகள் கொண்ட தாய்மார்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள். இவர்கள், சில பிரபலமான வலைத்தளங்களை போன்று ஏமாற்றலாம் அல்லது பயன்பாடுகளை  இலவசமாக நிறுவும் லிங்கை இ-மெயில்கள் மூலம் அனுப்பலாம். அவர்கள் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் பெயர்களைப் போலவே இணைய முகவரிகளை பயன்படுத்துகின்றனர், ஆனால் அவற்றில் சிறிய மாற்றங்கள் உள்ளன. தாய்மார்களின் கவனத்தை ஈர்க்க இந்த இ-மெயில்கள் பெற்றோர்களுக்கான அறிவுரைகளை கொண்டிருக்கும்.

  • அவர்கள் வழங்கும் கல்வி பயன்பாடுகளை அதன் முழு உள்ளடக்கத்தையும் சரிபார்க்காமல் வாங்குவதை தவிர்க்கவும்.
  • நன்கு அறியப்பட்ட கல்வி பயன்பாடுகளை, அதன் மற்ற பயனர்களின் விமர்சனங்களை பார்த்த பின்னர் தேர்வு செய்யவும்.
  • பெற்றோர் பராமரிப்பு பயன்பாடுகளைக் கொண்ட ஃபிஷிங் இ-மெயில்களை  எச்சரிக்கையாக அனுகுங்கள்.

அச்சுறுத்தும் இ-மெயில்கள்:

சில நேரங்களில் நீங்கள் ஒரு இ-மெயில் செய்திக்கு பதிலளிக்காவிட்டால், உங்கள் வெப்-மெயில் கணக்கு மூடப்படும் என்று ஒரு அச்சுறுத்தும் இ-மெயிலை   பெறலாம். மேலே காட்டப்பட்டுள்ள இ-மெயில் செய்தி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சைபர் குற்றவாளிகள் பெரும்பாலும் பயன்படுத்தும் உக்திகள் ஒருவரது பாதுகாப்பு சமரசம் செய்யப்படுவதை நம்பவைக்கிறார்கள்.  சைபர் குற்றவாளிகள் தொலைபேசியில் உங்களை அழைத்து, உங்கள் கணினி பிரச்சினைகளை தீர்க்க உதவுவதாகவும் அல்லது உங்களுக்கு ஒரு மென்பொருள் உரிமத்தை விற்க உதவுவதாகவும் கூறுவர்.

அது எப்படி நடக்கும்?

 செயல் 1:

பிரவுஸரில் உள்ள URL ஐச் சரிபார்க்கவும்

எண்களுடன் தொடங்கும் வலைத்தளங்களில் உங்கள் தகவல்களை தர வேண்டாம்

செயல் 2:

எப்போதும் URL- இல் பிழையுள்ளதா என்று சரிபார்க்கவும்

எப்போதும் அட்ரஸ் பாரில் URL ஐ நீங்களே டைப் செய்யவும். மாறாக காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம்.

செயல் 3:

எப்போதும் ஆன்லைன் பேங்கிங்கை பாதுகாப்பான சேனலில் செய்யவும். அதாவது பாட்லாக் (Padlock) ஐகானை சரிபார்த்து, சேனலை பாதுகாத்து வங்கி பணியைத்  தொடரவும்.

எப்போதும் நம்பிக்கையான வலைதளங்களை  உறுதி செய்ய https மற்றும் பாட்லாக் உள்ளதா என்று சரிபார்க்கவும்.

செயல் 4:

எப்போதும் நிதி அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை கோறும் இ-மெயில்களை சந்தேகத்துடன் அனுகவும்  குறிப்பாக "அவசர" கோரிக்கைகள்.  சந்தேகம் ஏற்படும்போது, சந்தேகத்திற்குரிய இ-மெயில்களுக்கு பதிலளிக்காதீர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய வலைத்தளங்களில் தகவல்களை தர வேண்டாம். நீங்கள் பெற்ற தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய கூறப்பட்ட அனுப்புநரை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

ஃபிஷிங் தளத்தின் உதாரணம், பஞ்சாப் தேசிய வங்கியின் பார்வை மற்றும் உணர்வு ஓரே மாதிரியாக இருத்தல்.

செயல் 5:

உங்கள் கடன் அட்டை / டெபிட் அட்டை / வங்கி தகவல்கள் போன்ற தனிப்பட்ட தகவலைக் கேட்கும் இ-மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம்

 

Page Rating (Votes : 0)
Your rating: