சைபர்ஸ்டாக்கிங் என்பது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மற்றொரு நபரைத் தொடர்ந்து துன்புறுத்துவது. மின்னஞ்சல் போன்ற மின்னணு ஊடகங்கள் வழியாக வெறுப்பூட்டும் பொருளை கொண்டு ஒரு  நபரை அல்லது குழுவினரைத் தொந்தரவு செய்வது. அச்சுறுத்தல்கள், அவதூறு ஏற்படுத்துவது, அடையாள திருட்டு, பாலினச் சேர்க்கைக்கான வேண்டுகோள், தவறான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் அடங்கும். ஒரு சைபர் ஸ்டாக்கர் பாதிக்கப்பட்டவருக்கு நன்கு தெரிந்தவராகவோ அல்லது  அந்நியராகவோ இருக்கலாம். மேலும், இது ஒரு கிரிமினல் குற்றமாகும்.

சைபர்ஸ்டாக்கர் பெண்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறார்?

  • உங்கள் நற்பெயருக்கு அல்லது உங்கள் நண்பர்கள் / குடும்பத்தினர் / சக ஊழியர்களுடனான உங்கள் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்டு அவர்கள் உங்கள் ஆன்லைன் அடையாளத்தில் ஆள்மாறாட்டம் செய்யலாம்.
  • அவர்கள் உங்கள் சமூக ஊடக கணக்கை அணுகி, உங்களின் ஆன்லைன் செயல்பாடுகள், தனிப்பட்ட தகவல்கள்  பற்றி தெரிந்துகொள்வது மற்றும் உங்கள் பாஸ்வோர்டையும் மாற்றலாம்.
  • அவர்கள் ஜி.பி.எஸ் அல்லது சில ஸ்பைவேர்களைப் பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்கலாம்.
  • சமூக ஊடகங்களில் உங்கள் பதிவிற்கு / புகைப்படங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர்கள் தவறான மொழியைப் பயன்படுத்தலாம்.
  • உங்கள் குடும்பத்தினர் / நண்பர்கள் / சக ஊழியர்களுடன் தொடர்புகொண்டு உங்கள் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை சேகரிக்க அவர்கள் முயற்சி செய்யலாம்.
  • உங்களை சங்கடபடுத்தும் விதமாக  உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பகிர அச்சுறுத்தலாம்.

இன்றைய நாட்களில் சைபர்ஸ்டாக்கிங் என்பது பெண் ஆபத்துக்கான ஒரு பெரிய தலைப்பாகி வருகிறது. இது ஆபத்தானதாகவும் மற்றும் உடல் ரீதியாக தீங்கிளைக்கும் அளவிற்கும் முன்னேறலாம். சைபர்ஸ்டாக்கிங் பற்றி புகார் அளிக்க காத்திருக்க வேண்டாம். சைபர்ஸ்டாக்கிங் நீடித்தால், நீங்கள் உணர்வு ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மிகுந்த துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும்.

சைபர்ஸ்டாக்கிங்கில் உடல் தொடர்பு இல்லாத காரணத்தால் அது நிஜ வாழ்க்கை ஆபத்துகளைக் காட்டிலும் குறைவானது என்று அர்த்தமில்லை. அனுபவம் வாய்ந்த ஒரு இணைய பயனருக்கு (சைபர்ஸ்டாக்கர்) உங்களின் தொலைபேசி எண், நண்பர்கள், உறவினர்கள், உங்கள் பணியிடங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கண்டுபிடித்து உங்களை துன்புறுத்துவது கடினம் அல்ல.

நீங்கள் சைபர் ஸ்டாக்கிங்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

தேவையற்ற வித்தியாசமான செயல்பாடுகளை நீங்கள் உணரும்போது, உதாரணமாக –

  • ஒருவர் உங்கள் சுயவிவரத்தை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் அதிகமாக பார்ப்பது
  • ஒருவர் உங்களின் பதிவிற்கு அல்லது புகைப்படத்திற்கு தவறான வழியில் அல்லது வார்த்தைகளில் கருத்து தெரிவிப்பது.
  • சமூக ஊடகங்களில் உங்கள் தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்களை ஒருவர் கேட்பது.
  • உங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருவர் கேட்பது.

இவ்வகையான செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால், அதனை புறக்கணிக்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.

சைபர் ஸ்டாக்கிங்கை தடுப்பது கடினம், ஏனெனில் ஸ்டாக்கர் இன்னொரு மாநிலத்திலும் இருக்கக்கூடும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்து அறையிலும் இருக்கக்கூடும். பரந்து விரிந்திருக்கும் இணைய உலகில் ஒரு ஸ்டாக்கரின் அடையாளத்தை சரிபார்த்து, கைது செய்வதற்கு தேவையான ஆதாரங்களை சேகரித்து, பின் அவரின் இருப்பிடத்தை கண்டறிவது மிகவும் கடினம். ஆகையால் பாதுகாப்பாக இருப்பதே உகந்தது. மேலும் நாம் பாதுகாப்பு அம்சங்களை புறக்கணிக்காமல் ஆன்லைன் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்தவேண்டும்.

சைபர் ஸ்டாக்கிங்கிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் : -

  • எந்தவொரு சமூக ஊடகத்தையும் பயன்படுத்தும் போது, தனியுரிமை அமைப்பினை குடும்பத்தினர் மற்றும் தெரிந்த நண்பர்களுக்கள் சுருக்கிக்கொள்வது எப்போதும் நல்லது.
  • எந்தவொரு நட்பு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, சமூக ஊடகங்களில் அந்நபரின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
  • ஜி.பி.எஸ் –ஐ பயன்படுத்தாதபோது அணைத்து வைக்கவும். இதனால் ஸ்டாக்கர் உங்கள் இருப்பிடத்தை அறிய முடியாது.
  • உங்களது தனிநபர் தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உங்களின் இணைய நண்பர் கோரினால் எப்போதும் பகிர வேண்டாம்.
  • உங்களது இணைய நண்பர்கள் உங்களின் புகைப்படங்கள் அல்லது செயல்களுக்கு தெரிவிக்கும் கருத்துக்களை எச்சரிக்கையாக கவனியுங்கள். அக்கருத்துக்கள் தேவையற்றது என நீங்கள் நினைத்தால் உடனடியாக அதை தடை செய்யுங்கள்.
  • உங்கள் சமூக ஊடக நண்பர்களில் யாராவது உங்களுடன் தவறாக நடந்து கொண்டால் அல்லது ஏதேனும் தேவையற்றச் செயல்களைச் செய்தால், அவற்றை சமூக ஊடக அமைப்பின் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது அவர்களைத் தடுக்கலாம். அதன்பிறகும் அவர்கள் உங்களைப் பின்தொடர முயற்சித்தால், அவர்களைப் பற்றி போலீசில் புகார் அளிக்க தாமதிக்க வேண்டாம்.

சைபர் ஸ்டாக்கிங்கை தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • சமூக ஊடகங்களில் எந்த ஒரு ஆன்லைன் நண்பர்களையும் நம்ப வேண்டாம்.
  • உங்களது தனிப்பட்ட தகவல்கள் / புகைப்படங்கள் / வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக பகிர வேண்டாம்.
  • உங்களின் செயல்களை ஆன்லைனில் பிதிவிடும்போது உங்களின் இருப்பிடத்தை பகிர வேண்டாம்.
  • உங்கள் ஆன்லைன் நண்பரின் தேவையற்ற நடத்தையை புறக்கணிக்காதீர்கள்.
  • சைபர் ஸ்டாக்கிங் அல்லது எந்த ஒரு தேவையற்ற செயல்களும் உங்களுக்கு நேர்ந்தால் அதைப் பற்றி புகார் அளிக்க தாமதிக்க வேண்டாம், ஏனெனில் அது உங்கள் தவறு அல்ல.

Source:

Page Rating (Votes : 6)
Your rating: