இணைய குற்றவாளிகளால், இரகசியத் தகவலைப் பெற பெரும்பாலும் பயன்படுத்தும் முதல் உக்தி சமூக பொறியியல் ஆகும். பெரும்பான்மையான சைபர் தாக்குதல்களுக்கு பின்னால் மனிதனின் செயல் இருப்பதால் இதனை கணிக்க முடிவதில்லை. சமூக பொறியியல் என்பது தவறான விளக்கங்கள் மூலம் தகவலை பெருவதற்கான அணுகுமுறை ஆகும். மக்களை, அவர்களது பாதுகாப்பு மீறப்படுவதை அறியாமலே ஏமாற்றி அவர்களின் தகவல்களை பெறுகின்றனர். இது ஆள்மாறாட்டமாக தொலைபேசியிலோ, நேரடியாகவோ அல்லது இ-மெயிலிலோ நடைபெறலாம். சில இ-மெயில்கள், வைரஸ் அல்லது ஆபத்தான மென்பொருள் கொண்ட இணைப்புகளை திறக்கும்படி பெறுநரை வலியுறுத்துகின்றன. எளிமையாக, சமூக பொறியியல் என்பது ஒருவரை நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்ய சொல்வது, அல்லது நீங்கள் விரும்பும் தகவலை வழங்கச்செய்வது. இவை யாவும் அந்நபர் அச்செயலின் ஆபத்தான விளைவுகளை அறியாவண்ணம் கையாள்வதாகும். இன்றைய நாட்களில், பல பெண்கள் அவர்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும், தொழில்நுட்பத்தினால் இணைக்கப்பட்டு தொடர்புகொள்கிறார்கள். மேலும் பல புதிய இணைய பயனர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் இந்த டிஜிட்டல் உலகத்தில் பெண்களை தாக்குவது எளிதாகிறது. ஒரு சமூக பொறியாளர் ரகசிய தகவல்களை பெறுவதற்கு பெண்களை பல்வேறு வழிகளில் அணுகுகின்றனர்.

சமூக பொறியியலாளர்கள் பெண்களை எவ்வாறு குறிவைக்கின்றனர்

பொது இடங்கள்

பொது இடங்களான கேஃபெகள், விடுதிகள், திரைப்பட திரையரங்குகள் அல்லது பல்வேறு சமூக ஊடக தளங்களில் சமூக பொறியியல் செய்யப்படலாம். நீங்கள் சாதரணமாகவே முக்கிய தகவல்களை ஒரு சமுக பொறியாளரிடமோ அல்லது வேறொருவர் உங்கள் உரையாடலை ஒட்டுகேட்டோ உங்கள் தகவல்களை பெற முடியும்.  

பொது இடங்களில் கவனக்குறைவான பேச்சுக்களைத் தவிர்க்கவும்

கிசுகிசுக்கள்

காபி கடையில் அல்லது உங்கள் அலுவலகத்தில் ஒரு கப் காபி குடித்துக் கொண்டே உங்கள் நண்பரிடம் பேசும் நடப்பு பேச்சுக்கள் உங்களைப் பற்றியோ அல்லது மற்றவரைபற்றியோ  முக்கியமான தகவலை வெளியிட வழிவகுக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு நபரை பற்றி மற்றொரு நபரிடம் வேடிக்கையாக பேசும் போது  ஒரு நபரைப் பற்றிய சில தகவல்களை நீங்கள் பகிரும் அந்த மற்றொரு நபர் ஒரு சமுக பொறியாளராகக்கூட இருக்க கூடும். இணைய தளத்தின் தற்போதைய சூழ்நிலையில் இந்த சாதாரண பேச்சுவார்த்தைகள் இணைய அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கும்.

கிசுகிசுப்புகள் சரியானவை அல்ல. இது உங்கள் எதிரி அல்லது நண்பரின் விவரங்களை ஒரு சமூக பொறியாளருக்கு சென்றடைய உதவுகின்றது. அந்நியர்களுடன் எப்போதும் அரட்டை அடிக்க வேண்டாம்.

தற்பெருமை அல்லது நம்பிக்கை

உங்கள் சாதனைகள், பெருமைகள் மற்றும் நம்பிக்கையை தெரியாத நபர்களிடம் நீங்கள் பெருமையாக கூறும் பொழுது உங்கள் குடும்பம் அல்லது அமைப்பின் முக்கிய தகவல்களை நீங்கள் வழங்கக்கூடும்.
ஒரு சமூக பொறியாளர் உங்கள் 

நிறுவனத்திற்கு அவரின் வியாபாரத் தேவைகளை முன்வைத்து, முக்கியமான நெட்வொர்க் தகவலை கேட்கலாம்.
நீங்கள் ஒரு நெட்வொர்க் நிர்வாகியாக இருந்தால் உங்கள் நிறுவனத்துடன் தொடர்புடைய எந்தவொரு நெட்வொர்க் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்தும் முன் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உங்கள் அமைப்பு மற்றும் தனிநபர் தகவல்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் பற்றி அந்நியர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

இணையம் 

சமூக பொறியியாளர்கள் நெட்வொர்க் நிர்வாகி போன்று நடித்து, நெட்வொர்க் மூலம் இ-மெயில் அனுப்பி கடவுச்சொற்கள் அல்லது எந்த முக்கியமான தகவலையும் மறைமுகமாகக் கேட்பதன் மூலம் தகவல்களை ஆன்லைனில் பெறலாம். சமூக பொறியியலின் அடிப்படை இலக்குகள் பொதுவாக ஹேக்கிங் போன்றதே: கணினிக்கு அல்லது தகவலுக்கான அங்கீகாரமற்ற அணுகலைப் பெற்று மோசடி செய்தல், நெட்வொர்க் ஊடுருவல், அடையாள திருட்டு அல்லது சிஸ்டம் மற்றும் நெட்வொர்க் ஆகியவற்றிற்கு இடையூறு செய்தல்.

  எப்பொழுதும் உங்கள் பாஸ்வோர்டை பகிர வேண்டாம்.

விஷிங்

இது தொலைபேசி மூலம் செயல்படுத்தப்படும் ஒரு சமூக பொறியியல் முறையாகும். இது பெரும்பாலும் வாய்ஸ் ஓவர் ஐபி (VoIP) வசதியினை பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து தனிநபர் மற்றும் நிதி தகவல்களை பெற்று பணமோசடி செய்கிறது. இச்சொல் " வாய்ஸ் " மற்றும் ஃபிஷிங் சொற்களின் கலவையாகும்.

தொலைபேசியில் தெரியாத நபர்களிடம் எந்த நிதி தகவலையும் கொடுக்காதீர்கள்;
உங்களை விசாரிப்பவரிடம் எந்த தகவலையும் தெரிவிக்கும் முன்பாக, நீங்கள் பேசுகின்றவரை பற்றிய  விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது வங்கியிடம் சரிபார்த்து உறுதிப்படுத்தவும்.

ஃபிஷிங்

ஃபிஷிங் என்பது, கடன் அட்டை எண்கள், கடவுச்சொற்கள், வங்கிகணக்குத் தகவல்கள் போன்ற உங்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மோசடி வகை. தாக்குதல் நடத்துபவர் மட்டுமின்றி அவர்களின் ஃபிஷிங் இ-மெயில் செய்திகள் மற்றும் பாப் அப் ஜன்னல்கள் அதிநவீனமாக மாறிவிட்டது. அவர்கள் பெரும்பாலும் உண்மையான நிறுவனங்களின் சின்னங்கள் மற்றும் ஒத்திருக்கிற பிற தகவல்களை சட்டபூர்வமான வலைத்தளங்களிலிருந்து நேரடியாக எடுக்கின்றன.  

நீங்கள் ஒரு ஃபிஷிங் இ-மெயில் செய்தியைப் பெற்றிருந்தால், அதற்கு பதிலளிக்காதீர்கள்; தெரியாத பயனர்களிடமிருந்து நீங்கள் பெற்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்.

பொறிவைத்தல்

இது இயற்பியல் ஊடகங்களைப் பயன்படுத்தும் சமூக பொறியியலின் ஒரு முறையாகும். மேலும் இது பாதிக்கப்பட்டோரின் ஆர்வத்தையும் பேராசையும் சார்ந்திருக்கிறது. இங்கே, குற்றம் புரிபவர் மால்வேர் பாதித்த யூ.எஸ்.பி அல்லது பென் டிரைவ் அல்லது சி.டி, டி.வி.டி ROM – ஐ பாதிக்கப்பட்டோரின் பார்வையில் உண்மையானது போன்ற தோற்றத்தில் வைத்து அவரின் ஆர்வத்தை தூண்டி, அவர் அச்சாதனத்தை பயன்படுத்த காத்திருப்பர்.

நடைபாதையிலோ, லிஃப்டிலோ, வாகன நிறுதத்திலோ காணப்படும் கவணிக்கப்படாத சாதனங்களை அனுக ஆசைப்படாதீர்கள்.

தூண்டுதல்

தூண்டுதல் என்பது ஓருவரிடம், தான் நம்பிக்கையானவன் என நம்பவைத்தோ அல்லது கேட்டோ அவரின் இரகசிய தகவல்களைப் பெறுவது. ஒரு சமூக பொறியாளர் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான, உங்கள் பள்ளி, நிறுவனம்  போன்றவற்றைத் தெரிந்துகொள்ள உங்கள் அடையாள அட்டையை கேட்கலாம்.

கவர்ச்சிகரமான சலுகைகளால் தூண்டப்படாமல் சந்தேகம் கொள்ளுங்கள். மேலும் உங்களின் இரகசியத் தகவல்களை எப்பொழுதும் வெளியிடாதீர்கள்.

டம்பஸ்டர் டைவிங்ட

ம்பஸ்டர் டைவிங் என்பது  ட்ராஷிங் என்று அழைக்கப்படும் ஓரு பிரபலமான சமூக பொறியியல் முறையாகும். ஒரு பெறும்  அளவிலான தகவலை ஒரு நிறுவனத்தின் கணினியின் குப்பைத் தொட்டியில் அல்லது வீடுகளில் எரியப்படும் கணினி குப்பைகளிலிருந்து பெறப்படலாம்.

எந்த இரகசிய ஆவணங்களையும் குப்பைக்கு நகர்த்த வேண்டாம். நகர்த்தும் முன் எந்த முக்கிய தகவல்களும் அதில் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

புரளிகள்

ஒரு புரளி என்பது பொய்யான ஒன்றை உண்மை என மக்களை நம்பவைக்கும் ஒரு முயற்சியாகும். இது வழக்கமாக ஓருவரை குறிவைத்தே செயல்படுத்தப்படுகிறது மேலும் இது சட்டவிரோதமான நிதி அல்லது பொருள் ஆதாயத்திற்காக செய்யப்படுகிறது. பெரும்பாலும் புரளிகள் ஒரு நடைமுறை நகைச்சுவையாக நிகழ்தப்பட்டு ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அறியப்படாத நபர்களிடமிருந்து பெறப்பட்ட இ-மெயில்களை நம்பாதீர்கள், எச்சரிக்கையுடன் இருங்கள் மற்றும் எப்போதுமே நிதித் தகவலை வழங்காதீர்கள்.

ப்ரீ-டெக்ஸ்டிங் (Pre-texting)

ப்ரீ-டெக்ஸ்டிங் என்பது ஒரு கற்பனையான சூழ்நிலையை உருவாக்கி மற்றும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டோரை ஈடுபடச் செய்து அவர்களின் தகவல்களை தெரிவிக்கத் தூண்டுதல் அல்லது  அச்செயல்களை செய்ய நடவடிக்கை எடுத்தல். இவை யாவும் சாதாரண சூழ்நிலைகளில் சாத்தியமில்லை. இது ஒரு எளிய பொய்யை விட சற்று அதிகமானது.

அந்நியர்கள் போலியான நிலைமையை உருவாக்கி, ரகசிய தகவலை சேகரிப்பதற்காக உங்களை நம்பவைத்து முட்டாளாக்க முயற்சிப்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

Page Rating (Votes : 7)
Your rating: