ஒய்-ஃபை (அருகலை) நம் தினசரி வாழ்கையின் ஒரு பகுதியாக இணைந்துவிட்டது. இணையத்தை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் வீடுகளிலும், வணிகங்களிலும் ஒய்-பை சாதனங்களை சார்ந்தே இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பொருள்களை வாங்குவதற்கும், வங்கி பணிகளை மேற்கொள்வதற்கும், தங்கள் வாழ்கையை ஒருங்கிணைப்பதற்கும், தொடர்பில் இருப்பதற்கும் இவற்றை பயன்படுத்துகிறார்கள். ஒய்-பை தொடர்புகளை பாதுகாத்தல் என்பது நம் தனிநபர் தகவல்களை பாதுகாப்பதில் ஒரு முக்கியமான பங்குவகிக்கிறது. ஒரு சில வயர்லெஸ் சாதனங்கள் வெகு சுலபமாக பாதிக்கபடக்கூடிய கட்டமைப்பு நிலையை கொண்டுள்ளன. இச்சாதனங்களுக்குரிய பாதுகாப்பு நிலைகளை முழுமையாக அறிந்திறாத பயன்பாட்டாளர்கள் குறிப்பாக பெண்கள் இணைய அச்சுறுத்தல்களால் வெகுவாக பாதிக்கபடுகிறார்கள். இணைய குற்றவாளிகள் தங்கள் சட்டவிரோத செயல்களை செய்வதற்கு இவ்வாறான பாதுகாப்பற்ற ஒய்-பை சாதனங்களயே குறிவைக்கிறார்கள்.

யவரேனும் தங்கள் கணிப்பொறி, மடிக்கணினி அல்லது கைப்பேசியினை ஒய்-பை சாதனங்களால் இணைக்கிறார்களோ அவர்கள் பாதுகாப்பற்ற அணுகல் புள்ளிகள் ( Access Points)/ வயர்லெஸ் ரவுட்டர்களோடு தொடர்புகொள்ளமுடியும். மேலும், இவ்அணுகல் புள்ளிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்பொழுது அவ்வரம்பில் உள்ள எவரேனும் இவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். இணைய குற்றவாளிகள் இவ்வாறு தொடர்பு ஏற்படுத்தியதும், மின்னஞ்சல் அனுப்புவது, தனிநபர் இரகசிய தகவல்களை பதிவிறக்கம் செய்வது, இணைப்பில் உள்ள மற்ற கணினிகளை தாக்குவது, ஆபத்து விளைவிக்கும் குறியீடுகளை மற்றவர்களுக்கு அனுப்புவது மற்றும் ட்ரோஜன் அல்லது பாட்நெட் போன்றவைகளை பாதிக்கப்பட்டவரின் கணினியில் நிறுவி அவற்றை நீண்ட நாள் அவர்கள் கட்டுபாட்டில் வைத்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

இலவச ஒய்-பை ஹாட்ஸ்ப்பாட்டுகள் இணைய தாக்குதல்களுக்கு பாதிக்கபடக்கூடியவையே

பெரும்பாலான பெண்கள் பொது இடங்களில் உள்ள இலவச ஒய்-பையுடன் இணைந்து தங்களின் சமுக ஊடகங்கள் மற்றும் அரட்டை செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள இலவச ஒய்-பையுடன் இணைந்து இணையத்தை பயன்படுத்துவோர் இணைய தாக்குதல்களுக்கு உள்ளாவர். பாதிக்கபடக்கூடிய நிலையில் உள்ள இணைப்புகளை பயன்படுத்தி அவற்றை தாக்கும் இணைய குற்றவாளிகள் அவர்களின் கடன் அட்டை எண்கள், கடவுச்சொற்கள், குறுஞு்செய்திகள், மின்னஞு்சல்கள் போன்றவற்றில் உள்ள இரகசிய தகவல்களை பெற இயலும். ஆகையால் இணையத்தை பயன்படுத்துவோர் பொது இடங்களில் உள்ள ஒய்-பையை தவிர்த்து பாதுகாப்பான நெட்வொர்க்குகளை பயன்படுத்த பரிந்துரைக்கபடுகின்றனர்.

இலவச பொது ஒய்-பையை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்

  • பொது இடங்களில் உள்ள திறந்த ஒய்-பை நெட்வொர்க்குகளில் தானாக இணைக்கும் வசதியினை அனுமதிக்ககூடாது
  •  பொது ஒய்-பைகளை பயன்படுத்தும்போது பாதுகாப்பான வலைதளங்களை மட்டும் பார்கவும்
  •  தகவல் பகிர்வை தவிர்கவும்
  •  தேவையில்லாதபோது ஒய்-பை இணைப்பை அணைக்கவும்
  •  முக்கிய கடவுச்சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

தனிநபரை கண்காணிப்பது

மொபைல் போன்கள் போன்றே ஒய்-பை சாதனங்களுக்கும் தனித்துவமான அடையாளங்காட்டிகள் உள்ளன. அவற்றைக் கொண்டு ஒருவரை கண்காணிக்க முடியும். இது பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தும். ஒய்-பை ஹாட் ஸ்ப்பாட்டை பயன்படுத்தி கண்காணிப்பது இணைய குற்றங்களுக்கு வழிவகுக்கும். ஒரு சேவையினை பெறவோ, பயன்படுத்தவோ நேரும்போது, பெரும்பாலான இணையதளங்கள் பயன்படுத்துவோரின் தனிநபர் தகவல்களான பெயர், வயது, zip குறியீடு மற்றும் தனிநபர் விருப்பங்களை பகிர வேண்டுகின்றனர்

அதிகாரிகளின் செயல்: அதிகாரிகள் மக்களின் இணைய தேடல் விவரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை எளிதாக அணுகமுடியும். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அவர்கள் அனுமதியின்றி கண்காணிக்கிறார்கள்

ஹேக்கர்களின் செயல் : தகவல்களை திருடுவது, சந்தேகப்படாத வகையில் பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்குகளை ஊடுருவது மற்றும் பெருநிறுவனங்களின் நிதி தகவல் மற்றும் இரகசியங்களை தவறாக பயன்படுத்துவது

வயர்லெஸ் தகவல்தொடர்புக்காக ரௌடர்(router)ஐ கட்டமைக்கும்பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

  • இணைக்கும் கருவியின் இயல்புநிலை பயனப்பெயர் மற்றும் கடவுச்சொற்களை மாற்றவும்வீட்டில் உள்ள ஒய்-பை இணைப்புகள் மற்றும் பிராட்பேன்ட் ரௌட்டர்களின் பாதுகாப்பிற்காக பயனப்பெயர் மற்றும் கடவுச்சொற்கள் பயன்படுத்தபடுகிறது. இதன்மூலம் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இணைப்புகளில் நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்
  • இயல்புநிலை SSIDஐ மாற்றவும் மற்றும் இணைப்பின் பெயரை தெரிவிப்பதை தவிர்கவும்
    அணுகும் புள்ளிகள் மற்றும் ரௌட்டர்கள், சர்வீஸ் செட் ஐடென்டிபையர்( Service SetIdentifier.) என்ற ஒரு நெட்வொர்க் பெயரை கொண்டுள்ளன. SSID ஐ தெரிந்துகொள்வதின் மூலம் ஒருவரின் நெட்வர்க்கை தாக்க முடியாதெனினும், அவை சரியாக கட்டமைகப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது

  •  ஒய்-பை வசதியை பயன்படுத்தாத நேரத்தில் அணைத்துவிடவும்

    வீட்டில் உள்ள நெட்வொர்க்கை அதிக நேரம் பயன்படுத்தாதபோது அணைத்துவிடுவது அவற்றின் தவறான பயன்பாட்டினை குறைக்கும். மேலும் அணுகல் புள்ளி ( Access Point ) ஐ பயன்படுத்தாதபோது அணைத்துவிடுவது நல்லது

  •  வீட்டில் உள்ள ஒய்-பை க்கு மாறும் IP முகவரியை தவிர்த்து நிலையான IP முகவரியை பயன்படுத்தவும்

    வீ்ட்டில் உள்ள நெட்வொர்க் நிர்வாகங்கள் பெரும்பாலும் மாறும் தன்மையில் உள்ள கட்டமைப்பு நெறிமுறை ( Dynamic Host Configuration Protocol - DHCP) ஐ கொண்டு IP முகவரியை நிர்ணையிக்கின்றன. ரௌட்டர் மற்றும் அணுகல் புள்ளியில் உள்ள DHCP ஐ அணைத்துவிட்டு ஒரு தனிப்பட்ட IP முகவரி எல்லையை அமைக்கவும். பின்ன்ர் இணைக்கபட்டுள்ள ஒவ்வொரு கருவியையும் இம்முகவரி எல்லைகுட்பட்டு கட்டமைக்கவும்

  •  எப்பொழுதும் மறைமுக குறியாக்கத்திற்கு ( encryption) வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும்
    தனிநபர் விவரங்களை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்கவும். சுலபமாக நினைவில் கொள்ளக்கூடிய
    சொற்றொடர்களை பயன்படுத்தவும்.

  •  MAC முகவரியை அணுகும் கட்டுபாட்டு முறையினை ( MAC address filtering ) ஒய்-பை சாதனங்களில் அணுமதிக்கவும்
    அணுகல் புள்ளிகள் மற்றும் ரௌட்டர்கள் அதனுடன் இணைந்த சாதனங்களின் MAC முகவரியினை கண்காணிக்கின்றன

  • பையர்வால் ( firewall) மற்றும் ஆண்டிவைரஸை கூடுதல் பாதுகாப்பிற்க்காக பயன்படுத்தவும்
    பையர்வால் ( firewall) மற்றும் ஆண்டிவைரஸை பயன்படுத்தி வையர்லெஸ் மற்றும் வையர்டு இணைப்புகளை தனிமைபடுத்தவும்

  • கறுவிகளில் உள்ள இயல்புநிலை பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தவும்

    அனைத்து ஒய்-பை சாதனங்களும் சில வகையான மறைமுக குறியமைக்கும் ( encryption ) வடிவங்களை ஆதரிக்கின்றன. அதனால் அவற்றை அனுமதிக்கவும்.
    மென்பொருளை ( firmware) மேம்படுத்துவதை வழக்கமாக கொள்ளவும்

  •  வையர்லெஸ் நெட்வொர்குகளில் உள்ள முக்கியமான தகவல்களுக்கு மறைமுக குறியமைக்கும் ( encryption ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும். அணுகல் புள்ளிக்கு ( access point) ஏற்ற அதிகபட்ச விசை அளவினை ( maximum key size) மறைமுக குறியாக்கத்திற்கு ( encryption ) பயன்படுத்தவும்

  • ஏர்டிராப் மற்றும் பைல் பகிர்வு வசதியினை தேவையானபொழுது மட்டுமே இயக்கவும்

இணைய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் பொது ஒய்-பை அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலம் நம் தகவல்களை பாதுகாப்பாக வைக்க முடியும்.

Page Rating (Votes : 5)
Your rating: