ஆன்லைன் ஷாப்பிங் – மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் வசதிகொண்ட ஒரு பிரபலமான கண்டுபிடிப்பு. சரியான தயாரிப்புகளை கண்டுபிடிக்க பல கடைகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை; அதிக ஆர்வமிக்க விற்பனையாளர்களை சமாளிக்க வேண்டியதில்லை; பணம் செலுத்தும் இடத்தில் நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. இந்த இ-வணிகத்தின் வளர்ச்சி, நாம் பொருள் வாங்கும் முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் போல, ஆன்லைன் ஷாப்பிங் உலகிலும் பிரச்சனைகள் உள்ளன. இவற்றை களைய இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல  முயற்சிகளை மேற்கொண்டாலும், வாடிக்கையாளர்கள் இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது இன்னும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இணைய குற்றவாளிகள் பெண்களை குறிவைக்கும் சில வழிகளைப் பார்ப்போம்

விலையுயர்ந்த பிராண்டு தயாரிப்புகளை குறைந்த விலையில் விற்பது:

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெரும்பாலும் விலை உயர்ந்த பொருட்களை நம்பமுடியாத விலைகளில் விற்பனை செய்யும்  விளம்பரங்களைக் காண்போம். இது வாடிக்கையாளர்களின்  கவனத்தை ஈர்க்கும், பெரும்பாலும் பெண்களை. இதனால் தரமற்ற பொருட்களை காசு கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்படுகிறது.  உதாரணமாக, பிராண்ட் பைகள், ஆடைகள், விலையுயர்ந்த தொலைபேசி மற்றும் அழகு பொருட்கள்.

எடை குறைப்பிற்கான இயற்கை வைத்தியம்:

நமது சமூக வலைப்பின்னல் மற்றும் உடனடி செய்தி அனுப்பும் பயன்பாடுகளில் பெரும்பாலும் எடை குறைப்பு பற்றிய குறிப்புகள் வருகின்றன. மேலும் அவர்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கு பணம் செலுத்துமாறு வேண்டுகின்றன. எடை குறைக்க விரும்பும் பெண்கள் இந்த செய்திகளால் கவரப்பட்டு, இறுதியில் போலியான தயாரிப்புகளை பணம் கொடுத்து வாங்குகின்றனர்.

விலையுயர்ந்த நகைகள்:

சைபர்-குற்றவாளிகள் குறிப்பிட்ட ஆன்லைன் நகை வலைத்தளங்கள் போன்று ஏமாற்றி, நகைகளுக்கு பிரமிக்கவைக்கும் சலுகைகளை வழங்கி, பெண்களை குறிவைக்கின்றனர்.  அவர்கள் குறிப்பிட்ட மதிப்புடைய  தயாரிப்புகளை ஆன்லைனில் வாங்குகிறார்கள், ஆனால் தரம் குறைந்த பொருட்களைப் பெறுகிறார்கள். இதனால் அவர்கள் ஏமாற்றப்பட்டு உண்மையான  வலைத்தளத்திற்கு புகார் அளிக்கும் போது அவர்கள் தங்கள் வலைத்தளத்தின் மூலம் வாங்கியதை மறுக்கிறார்கள். இதில் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் உள்ள ஆபத்துகள்

நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் தொடங்குவதற்கு முன்பு ஒரு சில கேள்விகளைக் கேட்டு சரிபார்க்க வேண்டும்

பிராண்ட்- இந்த இ-காமர்ஸ் தளம் உண்மையானதா?

பாதுகாப்பு- உங்கள் கடன் அட்டை பாதுகாக்கப்படுகிறதா?

தனியுரிமை- உங்கள் தகவல் விற்கப்படுகிறதா?

அனுப்புதல் - நீங்கள் வேண்டிய நேரத்தில் சரியான பொருள் கிடைக்கிறதா?

பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான குறிப்புகள்

  • கணினியின் OS ஐ மேம்படுத்தவும்:

உங்கள் பி.சி. மேம்படுத்தப்பட்ட ஆண்டி வைரஸ், ஸ்பைவேர், ஃபயர்வால் ஆகியவற்றாலும், நம்பகமான தளங்கள் மற்றும் உயர் மட்ட இணைப்புகளால் இணைய பிரவுஸர் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்தவும். 

  • நம்பகமான தளங்களிலிருந்து பொருட்களை வாங்கவும்:

நீங்கள் பொருட்களை வாங்க விரும்பும் வலைத்தளத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள், ஏனெனில் தாக்குதல் நடத்துபவர்கள் உண்மையான வலைதளங்கள் போன்று ஏமாற்றுகின்றனர். எனவே விற்பனையாளரின் தொலைபேசி எண்னை கொண்டு முகவரியை சரிபார்க்கவும். அந்த வலைத்தளம் நம்பகமான தளமா என்று உறுதி செய்யவும். பல்வேறு வலைத்தளங்களில் விலைகளை ஒப்பிடுங்கள். அந்த குறிப்பிட்ட வலைத்தளத்தின் அல்லது வணிகர்களின் ஊடகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை சரிபார்க்கவும்.

  • இணையதளத்தின் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்க்கவும்:

நீங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்க முற்படும் பொழுது, அந்த இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய பிரவுஸர் முகவரி பட்டியில், https அல்லது பேட்லாக் (padlock) உள்ளதா என்று சரிபார்த்து, நிதி பரிமாற்றங்களை தொடரவும்.

  • உங்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை கண்காணியுங்கள்:

நீங்கள் முடித்தவுடன் உடனடியாக கிரெடிட் கார்ட் அறிக்கையை சரிபார்த்து, நீங்கள் கட்ட வேண்டிய தொகை சரிதானா என்று பார்க்கவும். அதில் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யவும். 

  • அட்டை விவரங்கள் அல்லது வங்கிக் விவரங்களை வலைத்தளங்களில் சேமிக்காதீர்கள்:

டெபிட் அல்லது கிரெடிட் அட்டை எண்னை ஷாப்பிங் வலைத்தளங்களில் சேமிக்க வேண்டாம். நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்த பின்னர் அனைத்து இணைய பிரவுஸர் குக்கீகளை நீக்கீவிட்டு பி.சி யை அணைக்கவும். ஏனெனில் ஸ்பேமர்கள் மற்றும் ஃபிஷர்ஸ் ஆகியோர் இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினியை குறிவைத்து ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பி உங்கள் தனிப்பட்ட தகவலை சேகரிக்கக்கூடிய, தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவ முயற்சி செய்வர்.

  • நீங்கள் வாங்கியவற்றைப் பற்றி கேட்கும் மின்னஞ்சலுக்கு பதிலளிக்காதீர்கள்:

"உங்கள் பணம் செலுத்துதல், வாங்குதல் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தவும்." போன்று வரும் மின்னஞ்சல்களை கண்டு எச்சரிக்கையாக இருக்கவும். முறையான வணிகர்கள் அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்ப மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அத்தகைய மின்னஞ்சல்களைப் பெற்றால் உடனடியாக வியாபாரியை அழைத்து தெரிவிக்கவும்.

  • பாஸ்வோர்டைஅடிக்கடி மாற்றவும்:

நீண்ட காலத்திற்கு ஒரே பாஸ்வோர்டை பயன்படுத்த வேண்டாம்.  உங்கள் மின்னஞ்சல் ஐடி, வங்கி கணக்கு, கடன்-பற்று அட்டை பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றவும்.

  • வெவ்வேறு வலைத்தளங்களுக்கு வெவ்வேறு பாஸ்வோர்ட்டுகள்:

நீங்கள் அனைத்திற்கும் ஒரே பாஸ்வோர்டு பயன்படுத்தும்பொழுது, ஹேக்கர்கள் உங்கள் ஒரு பாஸ்வோர்ட்டை கண்டுபிடித்தால் பிறவற்றையும் எளிதில் கண்டுபிடிக்கக்கூடும். எனவே எல்லா வலைத்தளங்களுக்கும் வெவ்வேறு பாஸ்வோர்டை பயன்படுத்துங்கள். அனைத்து கடவுச்சொற்களையும் நினைவில் வைத்திருப்பது மிகவும் கடினமாக இருந்தாலும், அவை பாதுகாப்பை அதிகரிக்கும்.

பாதுகாப்பான நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துங்கள்:

எப்போதும் பாதுகாக்கப்பட்ட இணைய இணைப்பை பயன்படுத்தவும். பொது Wi-Fi இடங்கள் இணைய தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடியவை.

  • தள்ளுபடிகள் / பரிசுகள் வழங்கும் இணைப்புகளை க்ளிக் செய்ய வேண்டாம்:

சைபர் குற்றவாளிகள் பிரபலமான வணிக வலைத்தளங்களில் பெரும் தள்ளுபடிகள் இடம்பெறும் செய்திகளை அனுப்புகின்றனர். இதுபோன்று வாட்ஸ் - அப் குழுக்கள் அல்லது தெரியாத எண்களிலிருந்து வரும் சலுகைகளை க்ளிக் செய்வதை விட நிஜமான வளைதளங்களுக்குச் சென்று உறுதி செய்யவது நல்லது.  

Page Rating (Votes : 6)
Your rating: