தற்பொழுது இணையதள வணிகமுறை என்பது பிரபலமாகி வருகின்றது. இவற்றின் முலம் நமக்குத்தேவையான அனைத்து பொருட்களையும் (வீட்டு உபயோக, மின்சாதன பொருட்கள், மரச்சாமான்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் பல) நம் வீட்டிலிருந்தபடியே எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதன் முலம் சாலை போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் மக்கள் கூட்ட நெரிசல்களில் இருந்து தப்பிக்கலாம் அல்லது அவற்றினை தவிர்க்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் தான் பொருட்கள் வாங்க வேண்டுமென்றில்லாமல், கடை திறக்கும் வரை காத்திருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லாமல் எந்த நேரத்திலும் பொருட்களை வாங்கலாம். இந்த நன்மைகளைத் தவிர்த்து சில தீமைகளையும் உள்ளடக்கியது இந்த இணையதள வணிக முறை. எனவே பின்வரும் பாதுகாப்பு குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

  • நீங்கள் வழக்கமான இல்லாத போது இணையதள வணிக முறையினை பயன்படுத்துபவராக இல்லாத போது இணையதள வணிக முறையினை தவிர்க்க வேண்டும்.
  • எப்பொழுதுமே பாதுகாக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரியில் மட்டுமே இணையதள வணிக முறையினை செய்ய வேண்டும்.
  • ஃபிஸ்ஷிங் (Phishing) மின்னஞ்சல்கள் அல்லது இணைய இணைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். அவர்கள் கடன் மற்றும் பற்று அட்டைகள் பற்றிய விபரங்களை சேகரித்து அவற்றில் உள்ள பணத்தினை இணையதளத்தின் முலம் மோசடி செய்யக் கூடும்.

பாதுகாப்பான இணையதள வணிகத்தினைபற்றிய குறிப்புகள்

  • நீங்கள் இணையதளத்தில் பொருட்களை நுகர விருப்பப்பட்டால் அதற்கு முன் உங்கள் கணினியின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் சரிப்பார்க்கவும் அதாவது வைரஸ் அற்றதாக உள்ளதா என்று சரிபார்க்கவும்.
  • நீங்கள் பொருட்களை வாங்குவதற்கு முன்னர் அந்த இணையதள முகவரி நம்பகமானதா என ஆராய்ந்து அதன்பின் பயன்படுத்தவும். பின் விற்பனையாளருடைய தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியினை குறித்துக்கொள்ளவும். மேலும் பல இணையதளங்களில் அந்த பொருட்களின் விலையினை மற்றொரு நிறுவன தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும்.
  • நீங்கள் அவ்வாறு ஒப்பிட்டு பார்த்த பின் நீங்கள் பொருட்களை வாங்க நினைத்தால் முதலில் அந்த இணையதள பக்கம் உண்மையானதா, பாதுகாப்பானதா என ஆராய வேண்டும். எப்படி
  • என்றால் அதன் முகவரிபட்டையானது பாதுகாப்பானாதா என்று ஆராய வேண்டும். (https (or) Padlock and address bar) பின் பணத்தினை செலுத்த வேண்டும்.
  • பணத்தினை செலுத்திய பின்னர் நீங்கள் அந்த பக்கத்தினை பதிவு எடுத்து கொள்ள வேண்டும் அல்லது பரிவர்த்தனை பக்கத்திணை பக்க புகைப்படம் (Screenshot) எடுத்து கொள்ளவும். மற்றும் அந்த பொருளை பற்றின தகவல்களை குறித்துக்கொள்ள வேண்டும் (நியமனவிலை மற்றும் நிபந்தனைகள்).
  • கடன் அட்டையில் சரியான பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதா என்று சரிப்பார்க்கவும். பின் அதில் ஏதாவது குளறுபடி இருந்தால் உடனடியாக உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்துதல், வாங்குதல் மற்றும் கணக்குகளை உறுதிப்படுத்துமாறு ஏதாவது ஒரு மின்னஞ்சலை பெற்றால் உடனடியாக உண்மையான வணிகரிடம் தெரியப்படுத்தவும். ஏனென்றால் முறையான வணிகர்கள் அதுபோன்ற விபரங்களை கேட்டு மின்னஞ்சல்களை அனுப்பமாட்டார்கள்.
  • இணையத்தின் வாயிலாக வணிகம் செய்து முடித்த பிறகு உங்கள் கணினியின் இணையதள உலவியில் (Web Browser) உள்ள குக்கிகளை (Cookies) நீக்க விடுங்கள் இல்லையென்றால் வலைதளம் முலம் உங்களுடைய தகவல்களை சேகரித்து கொள்ளமுடியும்.
Page Rating (Votes : 0)
Your rating: