வாட்ஸப் ஒரு நல்ல தகவல் பரிமாற்ற செயலி. பெரும்பாலான மக்களிடையே வாட்ஸப் பிரபலமானதற்கு முக்கிய காரணம், அது பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் மற்றும் குறைந்த இணைய இணைப்பிலும் பயன்படுத்த ஏற்றவாறு உள்ளது. தற்போது உலகெங்கிலும் உள்ள பெருன்பான்மையான மக்களுக்கான தொடர்பு கருவியாக வாட்ஸப் உருவெடுத்துள்ளது. அதிலும் வாட்ஸப் பயனர்களில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது. நீங்கள் ஒரு செய்தியை ஒருவருக்கு அனுப்புவதாக இருந்தாலும், அல்லது உங்கள் விடுமுறை புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்புவதாக இருந்தாலும் நீங்கள் வாட்ஸப்பையே தேர்ந்தெடுப்பீர்கள்.

சைபர் குற்றங்களில் பெண்கள் முக்கிய இலக்காக இருப்பது கவனிக்கப்பட்டுள்ளது; வாட்ஸப் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொடர்பு கருவியாக இருப்பதால், மோசடிகாரர்கள் புதுவழிகளில் தங்கள் இலக்கை சிக்க வைக்க முயற்சி செய்வார்கள். வாட்ஸப் பாதுகாப்பாக பயன்படுத்த சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்கள் தனிநபர் தகவல்களை பாதுகாத்து மற்றும் சைபர் குற்றங்களுக்கு இரையாகமல் இருக்க வேண்டும்.

  • வாட்ஸப் புகைப்படங்கள் நேரடியாக கேமரா ரோலில் சேமிக்கப்படுவதை தவிர்க்கவும்.

வாட்ஸப் ஒரு செய்தி அனுப்பும் செயலி என்பதால் பெரும்பாலானோர் வாட்ஸப்பில் உரையாடுகின்றனர். அவற்றில் சில மிகவும் தனிப்பட்டதாக இருக்கக்கூடும். நீங்கள் புகைப்படங்களை பகிரும்போது அவை தானாகவே கேமரா ரோலில் சேமிக்கப்படுகின்றன. இதனால் உங்கள் நண்பர்கள் உங்களின் புகைப்படங்களை பார்க்கும்பொழுது உங்களின் தனிப்பட்ட புகைப்படங்களும் தோன்றக்கூடும்.

  • ஐ-போன் பயனர்கள்: உங்களின் தொலைபேசியின் செட்டிங்ஸ் மெனுவிற்குச் சென்று அதில் 'ப்ரைவசி', 'ஃபோட்டோஸ்',-ஐ கிளிக் செய்தபின் கேமரா ரோலிற்கு புகைப்படங்களை அனுப்பும் செயலிகளின் பட்டியலில் வாட்ஸப்பை நீக்கவும்.
  • ஆண்ட்ராய்டு பயனர்கள் ஃபைல்களை ஆய்வு செய்யும் ES ஃபைல் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தி வாட்ஸப்பின் படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய ஃபோல்டர்களை கண்டுபிடித்து அதனுள் '.நோ மீடியா' என்ற ஃபைலை உருவாக்கினால் அது ஆன்டிராய்டு கேலரி ஃபோல்டர்களை ஸ்கேன் செய்வதை தவிர்த்துவிடும்.
  • செய்தியிடல் மற்றும் பிற செயலிகளை ஆப் லாக் கொண்டு லாக் செய்தல்

வாட்ஸப்பை பாதுகாக்க பாஸ்வேர்டு அல்லது பின் (PIN)-ஐ உபயோகித்தல் சிறந்த வழியாகும். வாட்ஸப் இந்த அம்சத்தை கொண்டிருப்பதில்லை. உங்கள் செயலிகளை லாக் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தேவையற்றது போன்று தோன்றினாலும், உங்கள் தொலைப்பேசியை நீங்கள் இழக்க நேரிட்டால் உங்களின் உரையாடல்களை அணுகுவதை இவை தடுக்கும். அதே சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கு நல்ல விமர்சனங்கள் உள்ளதா என்று உறுதி செய்துகொண்ட பின்னர் அவற்றை ஒரு நம்பகமான வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்

  • 'கடைசியாக பார்க்கப்பட்டது' என்ற தகவலை மறைக்கவும்

‘கடைசியாக பார்க்கப்பட்டது’ என்ற நேர முத்திரை நமக்கு முக்கியமான தகவல் அல்ல என தோன்றினாலும், அவை உங்களை பற்றி முன்பே அறிந்திருந்த ஸ்கேமருக்கு இந்த சின்ன தகவல் கூட உபயோகமாயிருக்க கூடும். அதாவது நீங்கள் விழித்திருக்கிறீர்களா இல்லையா; வீட்டில் உள்ளீர்களா அல்லது வெளியூரில் உள்ளீர்களா; சினிமாவைவிட்டு வெளியேறுகிறீர்களா அல்லது விமானத்தை விட்டு இறங்குகிறீர்களா போன்றவை அவர்களுக்கு தெரியக்கூடும். வாட்ஸ் ஆப்-இன் 'சுயவிவரத்தில்' உங்கள் 'கடைசியாக பார்க்கப்பட்ட' நேரத்தை யார் பார்த்தது என கண்டறிந்து கட்டுப்படுத்தலாம்;

ஆன்டிராய்டு, ஐ.ஓ.எஸ், வின்டோஸ் அல்லது பிளாக்பெரி தொலைபேசிகளில் 'ப்ரைவெசி' மெனு உள்ளது. இதை அணைத்துவிட்டால் பிற பயனர்களின் 'கடைசியாக பார்க்கப்பட்ட' நேரத்தை நீங்களும் பார்க்க இயலாது.

  • ப்ரொஃபைல் புகைப்படத்தை பிறர் அணுகுவதை தடுப்பது

வாட்ஸப் அல்லது பிற உடனடி செய்தியிடல் செயலிகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் மொபைல் எண்ணிற்குப் பிறகு, உங்களின் சுயவிவர படம், மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய தனிப்பட்ட தகவல் ஆகும். ப்ரொஃபைல் புகைப்படத்தை அனைவரும் அணுகவதை குறைப்பதற்கான பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸப் வழங்கியுள்ளது. இயல்பாக அனைவராலும் பார்க்க முடிவதாக இருந்தாலும், நீங்கள் உங்ளின் செட்டிங்ஸில் மாற்றம் செய்து  உங்களின் தொடர்புகளுக்கு மட்டும் என தேர்வு செய்தால், அது உங்களின் தனிப்பட்ட தகவல்களின் அணுகலை பெரும் அளவில் குறைக்கும். அதே நேரத்தில் உங்களின் தொடர்பு பட்டியலில் தேவையற்ற எண்கள் இல்லாததை உறுதி செய்யவும்.

ப்ரைவசி மெனுவில் உள்ள ப்ரொஃபைல் புகைப்படத்தை பகிர்தலில் "தொடர்புகளுக்கு மட்டும்" என்று அமைக்கவும்

  • மோசடிகளை கவனிக்கவும்

வாட்ஸப் நிறுவனம் தானாகவே உங்களை எப்பொழுதும் தொடர்புகொள்ளாது. அவர்களின் உதவி மற்றும் ஆதரவு வேண்டி நீங்கள் இ-மெயில் செய்யாவிட்டால் அதுவாகவே வாட்ஸப் அரட்டைகள், குரல் செய்திகள், கட்டணம், மாற்றங்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பற்றிய இ-மெயில்களை அனுப்பாது. வாட்ஸப் நிறுவனம் வழங்கும் இலவச சந்தா என கூறும் எந்த ஒன்றும் அல்லது உங்கள் கணக்கை பாதுகாக்க பின்வரும் லிங்கை க்ளிக் செய்யுமாறு ஊக்குவிக்கும் எந்த ஒன்றும் மோசடியே, நம்பக்கூடாதது.

  • வாட்ஸப்-ஐ தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

இதற்காக நீங்கள் மூன்றாம் தரப்பு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மூன்றாம் தரப்பு செயலிகள் வாட்ஸப்ஐ சீரமைக்கிறது.
பல பயனர்கள் மூன்றாம் தரப்பு கீ போர்டு செயலிகளையும் பயன்படுத்துகின்றனர். இது ஒருவரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்து பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுக்கும். சில செயலிகள் வாட்ஸப்பின் அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் வாட்ஸப் இயல்பாகவே உங்கள் செய்திகளை பாதுகாப்பதற்காக மறைகுறியாக்கம் செய்யப்பட்டு பெறுனருக்கு அனுப்புவதால்  இதனை யாராலும் நடுவில் படிக்க முடியாது. இதேபோல், உங்கள் தகவல்களைப் பாதுகாக்க தொலைபேசியும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். பெரும்பாலான மூன்றாம் தரப்பு செயலிகள் அதிகாரப்பூர்வமான வலைதளங்களில் பதிவேற்றப்பட்டதல்ல, மேலும் இவற்றின் மேல் மால்வேர் சோதனை செய்யப்படுவதும் இல்லை. ஆகையால் இந்த செயலிகளை பயன்படுத்துவதால் உங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகிறது.

  • வாட்ஸப் வெப் - இல் இருந்து வெளியேற மறந்துவிடாதீர்கள்

வாட்ஸப் சமீபத்தில் வாட்ஸப் வெப் –ஐ அறிமுகப்படுத்தியது. தனிநபர் கணினியில் பணிபுரியும் போது இந்த மிரரிங் சேவை வாழ்க்கையை எளிதாக்குகிறது. இருப்பினும், பெரும்பாலான பயனர்கள், தொலைபேசி அல்லது பிரவுஸரின் மூலமாக வாட்ஸப் வெப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை அறிந்திருப்பதில்லை.  தேநீர் இடைவெளிக்காக நீங்கள் வெளியேறும் நேரத்தில் உங்களின் உரையாடல்களை பெரிய திரையில் உங்களின் சக நண்பர்கள் படிப்பதை சற்று நினைத்துப்பாருங்கள்.

Page Rating (Votes : 8)
Your rating: