இந்தியாவில், பெரும்பாலான மக்கள் சமுக வலைதளங்களில் இணைந்திருகின்றனர். இதில் பெண்கள் தங்கள் தினசரி தேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளன. ஆன்லைன் வணிகம், ஆன்லைனில் பரிவர்த்தனைகள், சமூக ஊடகங்கள், பயண உதவி, செய்தி, மின்னஞ்சல், சமையல் வீடியோக்கள், வேலை தேடல், யோகா வீடியோக்கள், புதிய தாய்மார்களுக்கு பெற்றோருக்குரிய அறிவுரை, புதிய வியாபாரத்தை தொடங்குவதில் தொழில் முனைவோர் உதவி ஆகியவற்றுக்காக இணையத்தை பல பெண்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்கள், தாங்கள் சும்மா இருக்கும் நேரங்களில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். ஒரு பெண் இயல்பாக நல்ல உள்ளம் கொண்டவள். அவர்கள் அக்கறை, அப்பாவிதனம், அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் பார்ப்பதையெல்லாம் நம்பும் தன்மை கொண்டவர்கள். இணைய குற்றவாளிகள் பெண்களின் பாதிக்கப்படகூடிய தன்மையை பயன்படுத்துவதால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன.

இன்றைய டிஜிட்டல் உலகில், இணையம் நம் வாழ்வில் பல சௌகரியங்களை உருவாக்கியுள்ளது. அதே சமயம் பல ஆபத்துகளையும் கொண்டுள்ளது. இணையத்தை தங்கள் சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு இணையம் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. இவை மால்வேர், ஃபிஷிங், மருந்தகம், அடையாள திருட்டு, ஏமாற்றுதல், ஆன்லைன் ஸ்கேம்கள், வைரஸ், ட்ரோஜன், ரான்சம்வேர் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை விளைவிக்கின்றன. இந்த இணைய உலகம், பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பது நம் மனதில் பெரிய கேள்வியாக இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், தினந்தோரும் பெண்கள் துன்புறுத்தபடுகிறார்கள், மீறப்படுகிறார்கள், அச்சுறுத்தபடுகிறார்கள். ஆனால் இதற்கு கவலைபடத் தேவையில்லை. சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்திய அரசின், தகவல் பாதுகாப்புக் கல்வி மற்றும் விழிப்புணர்வின் (Information Security Education and Awareness (ISEA)) இரண்டாம் கட்ட திட்டத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஊக்கபடுத்துகிறது. மேலும் பெண்களுக்கான இணைய பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. www.infosecawareness.in என்ற வலைதளத்தில் உள்ள வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலம் பெண்கள் தங்களை பாதுகாப்பதோடு மற்ற பிற பெண்களுக்கும் வழிகாட்ட முடியும். இணைய விழிப்புணர்வோடு இருங்கள், இந்தியாவை இணைய விழிப்புணர்வு உள்ள நாடாக மாற்றுங்கள்.

 ‘உங்கள் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு’

 

Page Rating (Votes : 14)
Your rating: